சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை ஈரான் மக்கள் போராட்டம், மற்றும் அமெரிக்காவின் ராணுவ தாக்குதல் அச்சம் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை குறித்த அச்சுறுத்தலை குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமை 5% அளவுக்கு சரிந்தது.

அமெரிக்காவின் முக்கிய கச்சா எண்ணெய் WTI (West Texas Intermediate) விலை 4.6% சரிந்து ஒரு பேரல் 59.18 டாலராக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பல நேரம் 5%-க்கும் மேல் சரிந்து காணப்பட்டது. இதேபோல் Brent North Sea கச்சா எண்ணெய் 4.4% குறைந்து 63.61 டாலராக வர்த்தகமாகியது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வுக்கு முக்கிய காரணம் ஈரானில் உருவான மக்கள் போராட்டங்களை அடக்கும் அரசு நடவடிக்கைகளுக்கு எதிராக டிரம்ப் ஈரானிய மக்களுக்கு உதவுவதாக அச்சுறுத்தியதால், சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் விலை உயர்ந்தது.
ஆனால் டிரம்ப் புதன்கிழமை பேசிய போது ஈரானில் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவது நின்றுவிட்டதாக கூறியுள்ளார். இதனால் ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான தேவை குறைந்துவிட்டதாக தெரிவித்தார். இது ஒரு தகவல் சந்தையில் அச்சம் குறைந்து கச்சா எண்ணெய் விலை சரிவை தூண்டியது.
ஈரான் உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்று. அங்கு ஏற்படும் எந்தொரு பிரச்சினையாக இருந்தாலும் உலகளவியா கச்சா எண்ணெய் சந்தையை பாதிக்கும். இந்த சரிவு கமாடிட்டி சந்தையை மொத்தமாக பாதித்துள்ளது.
வெள்ளி விலை ஆசிய வர்த்தகத்தில் 7%-க்கும் மேல் சரிந்தது. தங்கம் விலையும் சற்று குறைந்தது. பங்குச் சந்தை சரிவில் இருந்து உயர்ந்துள்ளது, தொழில்நுட்ப நிறுவனங்கள் நல்ல முடிவுகளை அளித்ததால் Nasdaq குறியீடு 1% உயர்ந்தது.


Click it and Unblock the Notifications