கோல்ட்மேன் சாச்ஸின் உலகளாவிய பொருட்கள் ஆராய்ச்சியின் இணைத் தலைவர் டான் ஸ்ட்ரூய்வன் ஈரானிய எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் பேரல்களாக குறைந்தால், அடுத்த ஆண்டுக்குள் ஒரு பேரலின் விலை சுமார் $20 உயரலாம் என்று கூறியுள்ளார். சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற முக்கிய உற்பத்தியாளர்கள் எண்ணெய் உற்பத்தி இழப்பை ஈடுகட்டினால், விலை உயர்வு பேரல் ஒன்றுக்கு $10-க்கும் குறைவாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது. ஆனாலும் எண்ணெய் சந்தை குறைந்த அளவிலான இடையூறுகளை சந்தித்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் சீனாவின் மந்தமான தேவை ஆகிய காரணங்களலால் இது ஏற்பட்டது.

இருப்பினும், சமீபத்திய நிகழ்வுகள் சந்தை விலையை மாற்றியுள்ள்ளன. இரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை மூன்று நாட்களில் லாபம் அடைந்துள்ளது. ஆனால் இனி வரும் நாட்களில் எண்ணெய் விநியோகத்திற்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் சந்தையில் முக்கிய உற்பத்தியாளரான இரான், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்கிறது. இஸ்ரேல் இரானின் எண்ணெய் உள்கட்டமைப்பை குறிவைத்தால், உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதத்திற்கு ஆபத்து ஏற்படலாம். அதேப்போல ஆய்வாளர்கள் குறிப்பாக கார்க் தீவு குறித்து கவலை கொண்டுள்ளனர், இது இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கு பொறுப்பாகும்.
ஈரானிய எண்ணெய் ஆலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஏற்படும் சாத்தியமான தாக்கங்கள் குறித்து அமெரிக்கா விவாதித்து வருவதாக ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில் கூறியிருந்தார். அவரது கருத்துக்கள் மூலம் எண்ணெய் விலை உயரலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புதனன்று வெளியான ஒரு செய்திக் குறிப்பில், ஃபிட்ச் சொல்யூஷன்ஸின் பிஎம்ஐ, ஒரு முழு அளவிலான போர் வெடித்தால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $100-ஐத் தாண்டும், ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $150 அல்லது அதற்கும் அதிகமாக உயரும் என்று தெரிவித்துள்ளது.
சில ஆய்வாளர்கள் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளர்கள் (OPEC+) இரானின் ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறின் தாக்கத்தை ஈடுசெய்ய போதுமான திறன் கொண்டுள்ளதாக நம்பினாலும், உலகளாவிய எண்ணெய் உற்பத்தி பெரும்பாலும் மத்திய கிழக்கில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அதிகமாக உள்ளது. இது மோதல் அதிகரித்தால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications