இந்தியா ரஷ்யாவிடம் அதிகப்படியான கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் வாங்கும் காரணத்தால் இந்தியாவில் விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.
உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் OPEC+ நாடுகளின் கூட்டமைப்பு சந்தை தேவையை அடிப்படையாக வைத்து கச்சா எண்ணெய் சப்ளை அளவை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன் வாயிலாக திங்கட்கிழமை ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்து அனைத்து உற்பத்தி பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதன் சங்கிலி தொடர் பாதிப்பு காரணமாக பணவீக்கம் அதிகரித்து மீண்டும் வட்டி விகிதங்களை அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
திடீர் மாற்றம்
இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கியமான காரணம் ரஷ்யாவே போலவே OPEC+ நாடுகள் எடுத்த முடிவு தான், அதிலும் குறிப்பாக சவுதி அரேபியா அதிகப்படியான கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பை அறிவித்துள்ளது.
OPEC+ நாடுகள்
ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் சவுதி அரேபியா OPEC+ நாடுகள் இணைந்து சுமார் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான சவுதி அரேபியா மட்டும் ஒரு நாளுக்கு 500000 பேரல் வீதம் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக சவுதி நாட்டின் எனர்ஜி அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
OPEC+ அமைப்பு
இதன் மூலம் OPEC+ அமைப்பில் இருக்கும் சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், அல்ஜீரியா, ஓமன் ஆகிய நாடுகள் அடுத்த மாதம் முதல் ஒரு மில்லியன் அதாவது ஒரு நாளுக்கு 10 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
2023 இறுதி வரையில்
இந்த உற்பத்தி குறைப்பு 2023 ஆம் ஆண்டு இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் OPEC+ நாடுகள் தெரிவித்துள்ளது. OPEC+ நாடுகள் அக்டோபர் மாதம் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது, ரெசிஷன் அச்சம் காரணமாகவும், வங்கிகள் திவாலாவது காரணமாகவும் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை உருவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி
இதனால் கச்சா எண்ணெய் தேவை பெரிய அளவில் குறைந்து வரும் வேளையில் கச்சா எண்ணெய் விலையும் சரிந்து வருகிறது. இந்த விலை சரிவை கட்டுக்குள் கொண்டு வரவும் கூடுதல் வருமானத்தை பார்க்கவும் OPEC+ நாடுகள் தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து அதன் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்
இதேபோன்று மார்ச் மாதம் முதல் ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து விலையை அதிகரித்தது, இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதி உட்பட பல நாடுகளுக்கு கோரிக்கை வைத்து வரும் வேளையில் சவுதி அரேபியா ஆதிக்கம் செலுத்தும் OPEC+ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை பெரிய அளவில் குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications