7 வருட உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலை உயருமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் கச்சா எண்ணெய் விலை தற்போது 7 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் எப்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

மத்திய பட்ஜெட், 5 மாநில தேர்தல் ஆகியவை இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அடுத்த சில வாரங்களுக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராது என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை 7 வருட உயர்வுக்குச் செல்ல என்ன காரணம்..? தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை என்ன..?

அபிதாபி டிரோன் தாக்குதல் எதிரொலி.. 7 வருட உச்சத்தினை தொட்ட கச்சா எண்ணெய் விலை.. ! அபிதாபி டிரோன் தாக்குதல் எதிரொலி.. 7 வருட உச்சத்தினை தொட்ட கச்சா எண்ணெய் விலை.. !

 கச்சா எண்ணெய் சந்தை

கச்சா எண்ணெய் சந்தை

கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரஷ்யா-உக்ரைன் பிரச்சனை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தி முதல் விநியோகம் வரையில் பல தடைகள் உருவாகியுள்ளது.

 90 டாலர் விலை

90 டாலர் விலை

இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் சப்ளை டிமாண்ட் பிரச்சனை அதிகமாக இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை 90 டாலர் வரையில் உயர்ந்து உள்ளது, இது அக்டோபர் 2014-க்குப் பின் பதிவு செய்யப்பட்ட உச்ச விலையாகும்.

 பெட்ரோல், டீசல் விலை
 

பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ளது கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய சந்தையில் எதிரொலிக்கவில்லை, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனம் 3 மாதமாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை.

 லாபம் பாதிப்பு

லாபம் பாதிப்பு

தற்போது கச்சா எண்ணெய் விலை 90 டாலர் வரையில் உயர்ந்துள்ள காரணத்தாலும், எரிபொருள் விலை உயர்த்தப்படாமல் இருக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் லாபம் பெரிய அளவில் பாதிக்க உள்ளது.

 ரஷ்யா - உக்ரைன்

ரஷ்யா - உக்ரைன்

ரஷ்யா அதிகப்படியான ராணுவம் மற்றும் ஆயுதங்களை உக்ரைன் நாட்டு எல்லையில் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அமெரிக்கா உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்தால் ரஷ்யா மீது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இந்நிலையில் ஐரோப்பிய சந்தைக்கு அதிகளவில் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்வது ரஷ்யா தான், எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஆதிக்கம் செய்யும் நிலையில் அமெரிக்காவில் வர்த்தகத் தடை அறிவிப்பு எரிபொருள் சந்தையில் பெரிய அளவிலான தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

  • WTI கச்சா எண்ணெய் - 87.20 டாலர்
  • பிரெண்ட் கச்சா எண்ணெய் - 89.91 டாலர்
  • மார்ஸ் கச்சா எண்ணெய் - 84.61 டாலர்

இந்தியன் பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை இன்று 88.23 டாலராக உள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி இந்தியன் பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 69.52 டாலர் மட்டுமே கிட்டதட்ட இரண்டு மாதத்தில் ஒரு பேரலுக்கு 18.71 டாலர் உயர்ந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil prices touched $90, the highest since October 2014 amid Russia -Ukraine border issue

Oil prices touched $90, the highest since October 2014 amid Russia - Ukraine border issue 7 வருட உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலை உயருமா..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X