லண்டன்: போகிற போக்கினை பார்த்தால் கச்சா எண்ணெய் விலை ஆய்வாளர்கள் கூறுவது போல் பேரலுக்கு பூஜ்ஜியத்தினை தொட்டாலும் தொட்டு விடும் போல.
அந்தளவுக்கு விலை படு பாதாளத்தினை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
இந்த நிலையில் எண்ணெய் விலை பேரலுக்கு பூஜ்ஜியத்தினை தொடுவதற்கு முன்பு தங்களது பாதுகாப்பிற்காக, எண்ணெய் வாங்கும் ஒப்பந்ததாரர்களுடன் ஒப்பந்தம் போட ஆயத்தமாகி வருகின்றனவாம்.
எண்ணெய் விலை வீழ்ச்சி
முக்கிய கச்சா எண்ணெய் சந்தையான அமெரிக்க, கனடா, மெக்ஸிகோ மற்று ஐரோப்பா போன்ற முக்கிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 10 டாலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் உலகினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் தேவையானது பெரிதும் சரிந்து வருகிறது. இதற்கிடையில் எண்ணெய் இருப்பும் நிரம்பி வழிகிறது.
எண்ணெய் விலை குறையும்
ஆக போகிற போக்கில் எண்ணெய் இருப்பு வைக்க இடம் இருப்பதே கடினம் தான். ஆக வரும் காலத்தில் விலை பேரலுக்கு 0 டாலருக்கு கீழே போகக் கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய நிகழ்வுகள் மிக அரிதானவை தான். ஆனால் இது மேற்கு டெக்சாஸ் சந்தையில் நிகழக்கூடும். கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேய் ஸ்பாட் விலைகள் எதிர்மறையான அளவு வீழ்ச்சியடைந்துள்ளன.
தங்கள் பொருளை எடுக்க கட்டாயம்
இன்னும் சொல்லப்போனால் விலை உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு கட்டாயபடுத்தி வருகின்றனராம். அந்தளவுக்கு விலை படு பாதாளத்தினை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. அதனால் விலை இன்னும் பாதாளத்தினை நோக்கி செல்லும் முன்பு, கொஞ்சமேனும் தங்கள் பாதுகாப்புக்காக ஒப்பந்தங்களை போட்டு வருகின்றனர்.
எண்ணெய் விலை குறைந்தது
முதல் காலாண்டிலேயே எண்ணெய் விலை 65% குறைந்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் சவுதி அரேபியாவும், ரஷ்யாவும் சந்தைகளை ஆதரிக்க ஒன்றாக வரலாம். அதற்காக அந்த இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்த ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் தான் தலையிடுவேன் என்றும் கூறியிருந்தார்.
தேவை குறைவு
இந்த நிலையில் உலகளாவிய எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 30 மில்லியன் பேரல் குறைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக இனி உற்பத்தி செய்யப்படும் எண்ணெயிலும் அதிகளவில் தள்ளுபடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில முக்கிய எண்ணெய் நிறுவனங்களும் ஒரு பூஜ்ஜிய விதிமுறையை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளனராம்.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications