நாங்க சொன்ன கேட்கணும்.. ஈரான் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! அமெரிக்காவுக்கு மெசேஜ்!

ஈரான் போர் தற்போது பெர்சியன் வளைகுடா, செங்கடல் தாண்டி உக்ரைன் எல்லையில் இருக்கும் காஸ்பியன் கடல் பகுதி வரையில் விரிவடைந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பதற்றத்திற்கு மத்தியில் கடந்த 2 நாட்களாக அமெரிக்காவும் சரி, ஈரானும் சரி எவ்விதமான அட்டாக் செய்யாமல் அமைதி காக்கிறது.

இந்த நிலையில் தான் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஒரு எண்ணெய் கப்பல் வெடித்து சிதறியுள்ளது. பல மாதங்களாக இவ்வழித்தடத்தில் பயணிக்கும் கப்பல்களை ஈரான் கொடுத்த ரூட்டில் மட்டும் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

நாங்க சொன்ன கேட்கணும்.. ஈரான் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! அமெரிக்காவுக்கு மெசேஜ்!

ஆனால் அமெரிக்காவின் உதவியுடன் ஓமன் நாட்டின் வழியாகவும், இதர வழிகளிலும் சரக்கு கப்பல்களும், எண்ணெய் கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையில் சென்றுக்கொண்டு இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் தொடர்ந்து உத்தரவை மீறி மாற்று பாதையில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த கண்ணிவெடி சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் ஈரான் - அமெரிக்கா உடன் போரை நிறுத்த பாகிஸ்தான், கத்தார் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ஈரான் தரப்பில் முக்கியமான எச்சரிக்கை அமெரிக்காவுக்கு விடுத்துள்ளது.

Also Read

அல் அரேபியா வெளியிட்டுள்ள செய்தியின் படி ஹார்முஸ் நீரிணையில் புதிய பாதை, மாற்று பாதை குறித்த பேச்சுவார்த்தையை ஏற்க முடியாது, ஈரான் நிர்ணயம் செய்த வழியாக மட்டுமே அனைத்து கப்பல்களும் செல்ல வேண்டும். அடுத்தாக மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்றால் ஹார்முஸ் நீரிணையின் முழு அதிகாரமும் ஈரானுக்கு தான் என்பதை அறிவிக்க வேண்டும், ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.

2வதாக அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகள் முடக்கியிருக்கும் ஈரானின் சொத்துக்களை முழுமையாக விடுவிக்க வேண்டும். கடைசியாக தான் அணுசக்தி குறித்து பேச முடியும் என ஈரான் தரப்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மறுமுனையில் 2 நாட்களாக தாக்குதல் நிறத்தப்பட்டு பேச்சுவார்த்தைகான முயற்சிகள் துவங்கியிருக்கும் வேளையில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் 5 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+