ஈரான் வைத்த பொறியில் சிக்கிய கச்சா எண்ணெய் கப்பல்.. அமெரிக்காவை நம்பினால் இதுதான் கதி..!

உலகின் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லக்கூடிய கப்பல் ஈரான் அனுமதி இல்லாமல் செல்லக் கூடாது என்பதற்காக ஈரான் ராணுவம் பல்வேறு முட்டுக்கட்டைகளை கடல்கண்ணி வெடிகள் மூலம் உருவாக்கியுள்ளது.

ஆனால் சமீபகாலமாக அமெரிக்காவின் ஒப்புதல் மற்றும் பாதுகாப்பு உதவியுடன் செயல்படும் ஓமன் நாட்டின் தெற்கு கடல்வழிப் பாதை வழியாக ஹார்முஸ் நீரிணையிலிருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் வெளியேறி வருகிறது.

ஈரான் வைத்த பொறியில் சிக்கிய கச்சா எண்ணெய் கப்பல்.. அமெரிக்காவை நம்பினால் இதுதான் கதி..!

இவ்வழித்தடத்தைப் பயன்படுத்தக் கூடாது என ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவந்த நிலையில் இன்று கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று ஈரான் வைத்த கடல் கண்ணிவெடியில் மோதி விபத்துக்குள்ளானதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த விபத்தில் கப்பலின் என்ஜின் அறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக ஹார்முஸ் வழித்தடத்தில் குறிப்பாக ஒமான் எல்லைப் பகுதியில் கடுமையான கரும்புகை சூழ்ந்துள்ளது. மேலும் கப்பலில் இருக்கும் அதிகாரிகளுக்கு நிலை குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Also Read

ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடன் அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஹார்முஸ் வழித்தடத்தில் கடல்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளைச் செய்யத் திட்டம் போட்டாலும், இதற்கான பணிகள் நடக்கவில்லை. மேலும் கடந்த சில மாதங்களில் பல கப்பல்கள் கடல் கண்ணிவெடியில் மோதி விபத்துக்குள்ளாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் எரிபொருளுக்குக் கடுமையான டிமாண்ட் இருக்கும் வேளையில் இத்தகைய விபத்துக்கள் உலகளாவிய சப்ளை மற்றும் எண்ணெய் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் தாக்குதல் இல்லையென்றாலும் இருநாடுகள் மத்தியிலான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Recommended For You

நேற்று ஈரான் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஈரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரான அப்பாஸ் ஆர்காச்சி, ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்ட, ஹார்முஸ் நீரிணையை 7 நாட்களில் திறக்கும் ஆஃபர் இன்னுமும் உள்ளது என அமெரிக்காவுக்கு நினைவூட்டுவதாகத் தெரிவித்தார்.

இதேவேளையில் இன்று புதிதாக நியமிக்கப்பட்ட ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சரான மெஹர்தாத் அக்லாகி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதலைத் துவங்கினால் அமெரிக்காவிலும், மத்திய கிழக்கில் அவர்களின் கூட்டாளி நாடுகளும் கடுமையான தாக்குதலையும், பாதிப்பையும் எதிர்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

அமெரிக்கா - ஈரான் போர் துவங்கிய முதல் நாளிலேயே முன்னாள் ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சரான Aziz Nasirzadeh மரணம் அடைந்த நிலையில், தற்போது ஈரான் அரசு, சட்டத்துறை மெஹர்தாத் அக்லாகி-யின் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பின்பு ஈரான் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சரை நியமித்துள்ளது. இவருடைய நியமனத்திற்கு 277 பேரில் 237 பேர் வாக்கு அளித்ததுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+