இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுப் பல பிரிவுகளில் வர்த்தகத்தைத் துவங்கியது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் பல வர்த்தகத்தை மூடியது குறிப்பிடத்தக்கது.
ஓலா இனி வரும் காலத்தில் டாக்சி சேவை மற்றும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு, விற்பனையில் மட்டுமே தனது மொத்த கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளது. இதனால் இவ்விரு பிரிவைத் தாண்டியிருக்கும் அனைத்து வர்த்தகத்தை மூடியும், மறுசீரமைப்புச் செய்தும் இவ்விரு வர்த்தகப் பிரிவுடன் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் ஓலா பைனான்சியல் சர்வீசஸ் பரிவு இனி வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுக்கும் சேவையை மொத்தமாக நிறுத்த உள்ளது.
ஓலா பைனான்சியல் சர்வீசஸ்
ஓலா பைனான்சியல் சர்வீசஸ் சமீபத்தில் வாங்கிய Avail Finance என்னும் பின்டெக் நிறுவனத்தின் செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பாக ப்ளூ காலர் தொழிலாளர்களுக்குக் கடன் வழங்கும் சேவையை அளித்து வந்தது. இதில் பெரும்பாலான கடன்கள் அனைத்தும் ஒரு வருடம் அடிப்படையிலான கடன்.
Avail Finance செயலி
இந்த நிலையில் ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் Avail Finance செயலியில் கடன் கொடுக்கப்படுவதை நிறுத்தி உள்ளது. தற்போது புதிதாகக் கடன் வாங்க திட்டமிடுவோருக்கு இந்தச் செயலியில் கடன் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
கடன் வசூல்
ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் Avail Finance செயலி டிசம்பரில் கடன் வழங்குவதை நிறுத்தியது. இதன் மூலம் Avail Finance அடுத்த ஒரு வருடத்திற்கு ஏற்கனவே வழங்கிய கடன்களை வசூலிப்பது மட்டுமே செய்ய உள்ளது. இந்தப் பணிகள் டிசம்பர் 2023 இல் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கடன் சேவை
இதற்கிடையில் ஓலா நிர்வாகம் புதிய கடன் சேவைகளை அளிக்கத் திட்டமிட்டு வருகிறது. இப்புதிய கடன் சேவைகளை ஓலா ஆப் மற்றும் ஓலா மணி ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் நிதி சேவை
Avail Finance சேவைகள் அனைத்தும் ஓலா பைனான்சியல் சர்வீசஸ் உடன் இணைக்கப்பட்ட நிலையில், இனி வரும் காலத்தில் அனைத்து டிஜிட்டல் நிதி சேவைகளும் ஓலா பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பெயரில் தான் வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்பிஐ டிஜிட்டல் கடன் சேவைகள் மீதான கட்டுப்பாட்டை அதிகரித்துள்ள நிலையில் ஓலா இந்த முடிவை எடுத்துள்ளது.
50 மில்லியன் டாலர்
Avail Finance நிறுவனத்தை உருவாக்கியது ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால்-ன் சகோதரர் அன்குஷ் அகர்வால் ஆவார். கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் சுமார் 50 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு ஏப்ரல் மாதம் Avail Finance நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Avail Finance ஊழியர்கள்
இந்த நிலையில் Avail Finance நிறுவனத்தின் ஊழியர்கள் புத்தாண்டு முதல் ஓலா கேப் சேவைகள் மற்றும் எலக்ட்ரிக் வாகன வர்த்தகத்தில் பணியாற்றுவார்கள் என ஓலா தனது டவுன் ஹால் மீட்டிங்-ல் பேசியது குறிப்பிடத்தக்கது.
ஓலா மணி
தற்போது ஓலா பைனான்சியல் சர்வீசஸ் கீழ் ஓலா மணி மூலம் ஈவேலட் சேவை வழங்கப்படுகிறது, இந்தச் சேவையின் கீழ் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கான கடன் வழங்கவும், ஓலா டாக்சி சேவை உட்பட அனைத்து ஓலா வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் சேவை அளிக்கிறது.
Ola Money Postpaid சேவை
இதேபோல் ஓலா பைனான்சியல் சர்வீசஸ் கீழ் Ola Money Postpaid என்ற மற்றொரு வர்த்தகப் பிரிவும் உள்ளது, இந்தச் சேவை பிரிவு மூலம் Buy-Now-Pay-Later சேவையை அனைத்து ஓலா வாடிக்கையாளர்களுக்கும் அளிக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications