ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் டான்ஸ் வீடியோ வைரல்.. ஓலா பைக்-ல் இப்படியொரு சேவையா..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஓலா ஒருபக்கம் தீ பிடித்து எறியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கண்டு பயந்தாலும், மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் குறையாத நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து சேவை முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

 

இதற்காகவே ஓலா நிறுவனத்தின் சிஇஓ-வான பாவிஷ் அகர்வால் தனது சிஇஓ பொறுப்புகளை விடுத்து டெக் பிரிவில் பணியாற்றத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் நிறுவனரான பாவிஷ் அகர்வால் தனது டிவிட்டரில் கலக்கலாக டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ செம வைரலாகியுள்ளது.

தீ பிடித்து எரிந்த ஓலா பைக்.. சிஇஓ எடுத்த திடீர் முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் புதிதாக இறங்கி உற்பத்தியிலும், விற்பனையிலும் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் நிலையில், ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தொழில்நுட்ப மேம்பாடுகளுள் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.

MoveOS 2.0 மென்பொருள்

MoveOS 2.0 மென்பொருள்

இந்நிலையில் ஓலா உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பமான MoveOS 2.0 வில், இதுவரை இந்த இரு சக்கர வாகனங்களில் இல்லாத பல சேவைகள் கொண்டு வரப்போவதாக ஓலா அறிவித்திருந்த நிலையில், அதற்கான முன்னோட்டத்தை பாவிஷ் அகர்வால் டான்ஸ் ஆடி தனது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஓலா எஸ்1 ப்ரோ
 

ஓலா எஸ்1 ப்ரோ

ஓலா நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களுக்காக உருவாக்கி வரும் MoveOS 2.0 மென்பொருளில் நேவிகேஷன், மியூசிக் போன்ற பல சேவைகள் இருப்பதாகவும், இந்த மென்பொருள் ஓலா எஸ்1 ப்ரோ வாகனங்களுக்கு மட்டும் பகுதி பகுதியாக அளிக்கப்படும் என்றும் ஓலா எலக்ட்ரிக் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

பாட்டு கேட்கும் வசதி

ஓலா நிறுவனத்தின் புதிய மென்பொருள் சேவை அப்டேட்-டில் ஸ்பீக்கர் மூலம் பாட்டு கேட்கும் வசதிகள் இருப்பதை விளக்கம் வகையில், MoveOS 2.0 மென்பொருள் அப்பேட் கொண்ட ஓலா எஸ்1 ப்ரோ வாகனத்தில் பாட்டு பாட, அதற்கு பாவிஷ் அகர்வால் தனது சக ஊழியர் உடன் டான்ஸ் ஆடி டிவிட்டரில் வீடியோ பதிவிட்டு உள்ளார்.

குறைபாடுகள்

குறைபாடுகள்

இதே வேளையில் இந்த டிவீட்டுக்கு கீழ் பலர் ஓலா வாகனத்தில் இருக்கும் குறைபாடுகளைக் கொட்டி தீர்த்தனர், இதனால் இந்த வீடியோ பதிவு ஓலா நிறுவனத்தின் நற்பெயரைப் பாதித்துள்ளது. ஏற்கனவே ஓலா வாகனம் தீ பிடித்து எறிந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ola Bhavish Aggarwal dance video viral in twitter; New Feature in Ola S1 pro bike with MoveOS2

Ola Bhavish Aggarwal dance video viral in twitter; New Feature in Ola S1 pro bike with MoveOS2 ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் டான்ஸ் வீடியோ வைரல்.. ஓலா பைக்-ல் இப்படியொரு சேவையா..!!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X