சென்னை: ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டைத் தொடர்ந்து, இதன் நிறுவனர் பாவிஷ் அகர்வால் உலகின் இளம் பில்லியனர்கள் பட்டியலில் தனது இடத்தை வலிமையாக்கிக்கொண்டு உள்ளார்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஐபிஓ முடிந்து இன்று பங்குச்சந்தையில் ஒரு பங்கு விலை ரூ.76 ஆக நிர்ணயிக்கப்பட்டு அதன் ஐபிஓ விலையிலேயே பட்டியலிடப்பட்டாலும், அதன் பின்பு 18 சதவீதம் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் ஓலா ஐபிஓ-வை நம்பி முதலீடு செய்த அனைவருக்கும் அதிகப்படியான லாபம் கிடைத்தது. இதேவேளையில் பாவிஷ் அகர்வால்-ன் சொத்து மதிப்பும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

பாவிஷ் அகர்வால் ஏற்கனவே பில்லியனர் தான், ஐபிஓ-வுக்கு முன்பு 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்புடன் சர்வதேச பில்லியனர் பட்டியலில் இருந்தார். தற்போது ஐபிஓ மூலம் ஓலா மதிப்பும் உயர்ந்தது, பாவிஷ் அகர்வால் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.
இன்று ஓலா பங்குகள் பட்டியலிடப்பட்டு 17 சதவீதம் வரையில் உயர்ந்த பின்பு பாவிஷ் அகர்வால் சொத்து மதிப்பில் கூடுதலாக 1.2 பில்லியன் டாலர்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம், பிளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதுவரை லாபம் ஈட்டவில்லை என்பது தான் ஐபிஓ-வில் முதலீட்டு செய்ய தயக்கம் காட்டியதற்கு முக்கியமான காரணமாகும். 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.14.7 பில்லியன் நட்டத்தைச் சந்தித்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பயணம்: ஓலா தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சாஃப்ட்பேங்க் மற்றும் டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் ஆகிய நிறுவனங்களின் முதலீட்டின் மூலம் ஓலா எலக்ட்ரிக் ஒரு யூனிகார்ன் நிறுவனமாக மாறியது.
2021 ஆம் ஆண்டில் தனது எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்திய சிறிது காலத்திலேயே நிறுவனம் பெரும் பின்னடைவை சந்தித்தது. ஓலா ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாகத் தீப்பிடித்ததால் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து 1,400-க்கும் அதிகமான ஸ்கூட்டர்களை நிறுவனம் திரும்பப் பெற்றது, சரி செய்தது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டிற்கு முன்பே, பவிஷ் அகர்வால் பிளூம்பெர்க்கின் உலகின் முதல் 500 பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றார். உலகில் 40 வயதுக்குட்பட்ட ஏழு பேரில் இவரும் ஒருவர்.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications