டாக்சி சேவை நிறுவனமான ஓலா கேப்ஸ், செப்டம்பர் 16 அன்று, அதன் பைக் டாக்ஸி சேவைகளை மீண்டும் துவங்குவதாக அறிவித்தது. ஓலா எலக்ட்ரிக்கின் S1 ஸ்கூட்டர்களை வைத்து பெங்களூரில் மட்டுமே இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று பெங்களூரில் ஓலா பைக் டாக்சி சேவையை மறுதொடக்கம் செய்கிறோம். இந்த முறை, முழுவதுமாக எலெக்ட்ரிக் மற்றும் எங்களுடைய சொந்த S1 ஸ்கூட்டர்கள்!," என்று ஓலாவின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ, பவிஷ் அகர்வால், ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

5 கிமீக்கு 25 ரூபாய், 10 கிமீக்கு 50 ரூபாய் என நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. "குறைந்த செலவு, மிகவும் வசதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கு சிறந்தது! அடுத்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் இச்சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அகர்வால் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பைக் டாக்சிகள் மத்திய மாநில அரசுகளின் கண்காணிப்பு கீழ் வந்துள்ள வேளையிலும், பலர் இதற்கு அதிகப்படியான எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் ஓலா தனது பைக் டாக்சி சேவையை அறிமுகம் செய்துள்ளது. கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பைக் டாக்சிகளை தடை செய்ய ஆலோசித்து வருகின்றன.
கர்நாடகா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, இந்த வாரம் செவ்வாய்கிழமையன்று, ரேபிடோ பைக் டாக்சிகளை நிரந்தரமாக தடை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
பைக் டாக்ஸி தடையானது ரைடர்ஸ், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு மற்றும் மின்சாரத்தில் செல்வது தொடர்பான இரண்டு பிரச்னைகளின் பின்னணியில் வருகிறது.
ஓலாவின் 'ஆல் எலக்ட்ரிக்' முயற்சியால், நிறுவனம் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். உண்மையில், ஜூலை 2021 இல் மின்சார பைக் டாக்ஸி கொள்கையை அறிமுகப்படுத்திய நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகா ஆனது. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பெங்களூரில் ஒரு ஆபரேட்டர் கூட இ-பைக் டாக்ஸி சேவைகளை வழங்கத் தொடங்கவில்லை.
பைக் டாக்சி கொள்கையானது முதன்மையாக முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, குறிப்பாக மெட்ரோ, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல். தொலைதூரப் பயணங்களை மறுக்கும் அல்லது அதிகப்படியான கட்டணங்களைக் கோரும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுடன் பேரம் பேசும் தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
கர்நாடக மாநில தனியார் போக்குவரத்து சங்கத்தின் கூட்டமைப்பு, 36 பேருந்து, டாக்சி மற்றும் சரக்கு வாகன தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, பல்வேறு உரிமைகள் மற்றும் இழப்பீடுகளை கோரி திங்கள்கிழமை மதியம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பைக் டாக்ஸி சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
ஓலா, உபெர் மற்றும் ரேபிடோ ஆகிய ரைட்-ஷேரிங் தளங்களுக்கு பெரும் பின்னடைவாக, டெல்லி போக்குவரத்துத் துறை பிப்ரவரி 20 அன்று தங்கள் பைக் டாக்ஸி சேவைகளை உடனடியாக நிறுத்துவதற்கான பொது அறிவிப்பை வெளியிட்டது.
இருப்பினும், ஜூன் மாதம், விதிமுறைகள் அறிவிக்கப்படும் வரை பைக் ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் செயல்பாட்டைத் தொடர அனுமதிக்கும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications