TamilNadu: கிருஷ்ணகிரி-யில் 1500 ஏக்கர் நிலத்தை வாங்கும் OLA.. அடுத்த பிரம்மாண்ட திட்டம்..!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிதாக ஒரு எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அமைப்பதற்காகச் சுமார் 1500 ஏக்கர் நிலத்தை வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விற்பனையில் தாறுமாறான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் ஓலா தனது உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய மாடல்களை அறிமுகம் செய்யவும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மக்கள் வரவேற்பு சிறப்பாக இருக்கும் நிலையில் புதிய தொழிற்சாலை பணிகளை வேகமாகத் துவங்கியுள்ளது.

ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைத்திருக்கும் நிலையில் இதே பகுதியில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு 1500 ஏக்கர் நிலத்தை வாங்கும் ஓலாவின் திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1500 ஏக்கர் நிலம்

1500 ஏக்கர் நிலம்

இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு தொழிற்சாலைக்கான மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் நிலையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு 1500 ஏக்கர் நில கையகப்படுத்தும் திட்டம் மற்றும் ஒப்புதல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால்

இந்த நிலையில் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால் அடுத்தச் சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 தொழிற்சாலை

3 தொழிற்சாலை

இந்த 1500 ஏக்கர் நிலத்தில் ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி தளம், உதிரிபாகங்களின் சப்ளையர் தொழிற்சாலை, பேட்டரி உற்பத்தி ஆலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என அறியப்படுகிறது. இந்தத் திட்டத்தை ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பவிஷ் அகர்வால் தொழிற்சாலை அமைக்கும் முன்பே அறிவித்திருந்தார்.

1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு

1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா அமைக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பூங்காவில் அடுத்தப் பத்தாண்டுகளின் இறுதிக்குள் சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 500 ஏக்கர் நிலம்

500 ஏக்கர் நிலம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா ஏற்கனவே சுமார் 500 ஏக்கர் நிலம் வைத்துள்ளது, இதைத் தொடர்ந்து இப்போது 1,500 ஏக்கர் நிலத்தை வாங்க உள்ளது. இது ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் வணிகத்தின் திறனை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, பேட்டரி தயாரிப்புக்கு வழிவகுக்க உள்ளது.

எலக்ட்ரிக் கார், பேட்டரி, உதிரிபாகங்கள்

எலக்ட்ரிக் கார், பேட்டரி, உதிரிபாகங்கள்

டெஸ்லா உலகம் முழுவதும் செய்ததை ஓலா இந்தியாவில் செய்ய உள்ளது. உதிரிபாகங்கள் முதல் மொத்த உற்பத்தியும் ஓரே தளத்தில் வைத்துக்கொண்டு செலவுகளைக் கட்டுப்படுத்திப் பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

 ஓலா EV டாக்சி

ஓலா EV டாக்சி

ஓலா ஆன்லைன் டாக்சி சேவை தளத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை தாமதமாகக் கையில் எடுத்தாலும், வேகமாகச் செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது பெங்களூரில் 1,000 எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தி டாக்சி சேவை அளிக்க உள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

1.5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

1.5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. 2021ல் தான் ஓலா எலக்ட்ரிக் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ மக்களிடம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஓலா ஸ்கூட்டர் திட்டம்

ஓலா ஸ்கூட்டர் திட்டம்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது Ola S1 Pro, Ola S1, மலிவு விலை பிரிவில் Ola S1 Air வாகனம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வர உள்ளது, இந்த வாகனம் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதர பிற இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

ஓலா எலக்ட்ரிக் கார் திட்டம்

ஓலா எலக்ட்ரிக் கார் திட்டம்

இதேபோல் எலக்ட்ரிக் கார் பிரிவில் முதல் காரை 2024ஆம் ஆண்டிலும், 2027ஆம் ஆண்டில் 6 எலக்ட்ரிக் கார்களையும் அறிமுகம் செய்ய ஓலா எலக்ட்ரிக் திட்டமிட்டு உள்ளது. இந்தத் திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் ஓலா தனது டாக்சி தேவைக்குப் பிற நிறுவனங்களிடம் இருந்து கார்களை வாங்காமல் சொந்தமாகத் தயாரித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+