1 நொடிக்கு 4 வாகனங்கள் விற்பனை.. போட்டி நிறுவனங்களுக்கு ட்ஃப் கொடுக்கும் ஓலா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவு உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், மக்களின் கவனம் மின்சார வாகனத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

 

இதனால் மின்சார வாகனங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு எனலாம். இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளன.

அதிலும் சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்பே பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய ஓலா ஸ்கூட்டர், பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியது.

செப்டம்பர் 15க்கு விற்பனையை தள்ளி வைத்த ஓலா ஸ்கூட்டர்.. கவனிக்க வேண்டியவை என்ன..! செப்டம்பர் 15க்கு விற்பனையை தள்ளி வைத்த ஓலா ஸ்கூட்டர்.. கவனிக்க வேண்டியவை என்ன..!

கடும் போட்டி

கடும் போட்டி

முன்னணி வாகன நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்தியினை செய்து வரும் நிலையில், அவற்றிற்கு டஃப் கொடுக்கும் விதமாக ஓலா நிறுவனம் தனது மின்சார வாகனத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 15 அன்று விற்பனையை தொடங்கியது. சமீபத்திய வாரங்களுக்கு முன்பே விற்பனை தொடங்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டது.

பலே விற்பனை

பலே விற்பனை

ஓலா மின்சார ஸ்கூட்டர் எஸ் 1 மற்றும் எஸ் ப்ரோ விற்பனையை தொடங்கியுள்ள நிலையில், விற்பனையின் முதல் நாளில் மட்டும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஒலாவின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் கூறியுள்ளார். சொல்லப்போனால் விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே நொடிக்கு 4 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டதாக பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

விலை எவ்வளவு?
 

விலை எவ்வளவு?

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மின்சார வாகன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஓலாவின் S1 ரக ஸ்கூட்டர் 121 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலையானது 99,999 ரூபாய் என்றும், 181 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலை 1,29,999 ரூபாயாகவும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆர்வம்

மக்கள் ஆர்வம்

ஆரம்பத்தில் இந்த வாகனத்தினை 499 ரூபாய் செலுத்தி ப்ரீ புக்கிங் செய்ய அறிவிக்கபட்ட, ஓரே நாளில் 1 லட்சம் வாகனங்களுக்கு மேலாக புக்கிங் செய்யப்பட்டது. இதன் மூலமே ஓலா ஸ்கூட்டர் மீதான மக்களின் ஆர்வத்தினை தெரிந்து கொள்ளலாம். இது மக்கள் மத்தியில் மின்சார வாகனங்களுக்கு எந்த அளவு இடம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சில பேமெண்ட் ஆப்சன்

சில பேமெண்ட் ஆப்சன்

மாத தவணை முறையில் வாங்க நினைப்பவர்கள், ஓலாவுடன் பார்ட்னர்ஷிப் வைத்துள்ள வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் இணைந்தும் வாங்கலாம். இதில் ஓலாவின் S1 ரக வாகனத்திற்கு 2,999 ரூபாயும், S1 proவிற்கு 3,199 ரூபாயும் மாத தவணை செலுத்த வேண்டியிருக்கும். இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பதிவு கட்டணம், மாநிலங்கள் வழங்க கூடிய மானியங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து உங்கள் ஏரியாவில் ஆன்-ரோட் விலை மாறுபடலாம்.

எப்போது டெலிவரி

எப்போது டெலிவரி

ஓலாவினை புக் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனம் டெலிவரி செய்யும் முன்பு, எந்த நேரத்திலும் கேன்சல் செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளார்கள் வாகனத்தினை பதிவு செய்த 72 மணி நேரம் கழித்து, எஸ்டிமேட்டட் டெலிவரி தேதி கொடுப்படும் என்று ஓலா அறிவித்துள்ளது.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

ஓலாவின் இந்த மின்சார ஸ்கூட்டர் விலையானது, மற்ற முன்னணி நிறுவனங்களின் பெட்ரோல் வாகனங்களோடு ஒப்பிடும்போது விலை சராசரி தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கிடையில் சில மாநிலங்களில் மின்சார வாகனங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது இன்னும் விலை குறைவானதாக மாறியுள்ளது.மொத்தத்தில் மற்ற நிறுவனங்களின் வாகன விலையை ஒப்பிடும்போது சரியான விலையாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola ஓலா
English summary

Ola CEO said selling 4 e-electric scooters every second

Ola latest updates.. Ola selling 4 e-electric scooters per second
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X