1000-க்கும் மேற்பட்ட நகரங்களில் புக்கிங்.. முதல் நாளே டெலிவரி+ சர்வீஸ் சேவை.. துள்ளி குதிக்கும் ஓலா!

மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஒலாவின் மின்சார ஸ்கூட்டரானது, சந்தைக்கு வரும் முன்னரே ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.

24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சம் வாகனங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டதாக, ஓலா சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இது மின்சார வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு உள்ளது என காட்டுகின்றது.

மிகப்பெரிய வாகன சந்தையான இந்தியாவில் ஓலாவின் இந்த பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம், ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

முதல் நாளே அட்டகாசம் தான்

முதல் நாளே அட்டகாசம் தான்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1000 மேற்பட்ட நகரங்களில் இருந்து புக்கிங் செய்யப்படும் என்று, ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் கூறியுள்ளார். அதோடு ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படவுள்ள நிலையில், முதல் நாளில் இருந்து நாடு முழுக்க டெலிவரி மற்றும் சர்வீஸ் சேவையும் நாடு முழுவதும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

புரட்சியை செய்வோம்

புரட்சியை செய்வோம்

அதோடு ஆகஸ்ட் 15ல் இருந்து ஒன்றிணைந்து ஒரு புரட்சியை நிகழ்த்துவோம். ஏற்கனவே இந்த வாகனம் பற்றிய பல அறிவிப்புகளை கொடுத்துள்ள ஓலா நிறுவனம், இதுவரை விலை குறித்த எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியாகவில்லை

ஆகஸ்ட் 15 அன்று முதல் விலை குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஓலா நிறுவனம் ஓலா ஸ்கூட்டரருக்கான முன்பதிவினை தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே மாபெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாகன நிறம்

வாகன நிறம்

ஏற்கனவே ஓலா 10 வண்ணங்களில் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இது நேரடி விற்பனையை கையில் எடுக்கலாம் என்றும் தெரிகிறது.

இது பிரத்யேகமாக டீலர் நெட்வோர்கினை அமைப்பதை விட, நேரிடையாக மக்களுக்கு சேவை செய்யலாம் என அறிவித்துள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பு

மக்கள் எதிர்பார்ப்பு

இந்த ஸ்கூட்டர் உற்பத்திக்காக ஓலா நிறுவனம் ஓசூரில் அமைத்து வருகின்றது. இது குறித்து ஏற்கனவே பல கட்டுரைகளில் நாம் பார்த்துள்ளோம்.

இன்றைய நாளில் உலகம் முழுவதுமே மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் இந்த நிலையில், ஓலாவின் இந்த பிரம்மாண்ட ஆலை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய பங்கு வகிக்கலாம்

முக்கிய பங்கு வகிக்கலாம்

ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது சந்தையில் ஒரு முக்கிய இடத்தினை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், அதற்கு மாற்றாக பார்க்கப்படும் மின்சார வாகனங்கள், வருங்காலத்தில் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்

ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்

அதோடு இந்திய அரசும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மின்சார வாகனங்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அதிலும் ஓலாவின் பிரம்மாண்ட ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் திட்டம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி பற்றி கவலையில்லை

பேட்டரி பற்றி கவலையில்லை

அதோடு ஓலாவின் இந்த எலெக்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை 18 நிமிடம் சார்ஜ் செய்தால், அதன் மூலம் நீங்கள் 75 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும் என்கிறது. ஆக சார்ஜிங் பற்றிய கவலையில்லை.

மொத்தத்தில் பல அம்சங்களுடன் வெளி வரும் ஓலா ஸ்கூட்டரானது மின்சார வாகனத்ததில் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார கார் எப்போது?

மின்சார கார் எப்போது?

தற்போது சந்தையில் இருந்து வரும் மின்சார வாகனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அறிமுகமாக விருக்கும் ஓலா, அதன் போட்டியாளார்களுக்கு உண்மையில் பெரிய சவால் தான். அதோடு எதிர்காலத்தில் நான்கு வாகன உற்பத்தியிலும் கவனம் செலுத்தலாம் என்றும் ஏற்கனவே கூறியிருப்பது, கார் பிரியர்களுக்கு மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பில் கண்கானிக்கலாம்

ஆப்பில் கண்கானிக்கலாம்

ஓலா ஸ்கூட்டரில் வாடிக்கையாளர்கள் தங்களது சார்ஜிங் பற்றிய விவரங்களை ஆப்பில் கண்கானித்துக் கொள்ள முடியும்.
மேலும் வீடுகளில் சார்ஜ் செய்ய வேறு எந்த கூடுதல் நிறுவலும் தேவையில்லை. வழக்கமான சார்ஜர்களிலேயே சார்ஜினை ஏற்றிக் கொள்லலாம்.

வேலையும் கிடைக்கும்

வேலையும் கிடைக்கும்

ஓலாவின் இந்த பிரம்மாண்ட திட்டத்தினால் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். சுற்றுசூழலுக்கும் நன்மையே. மற்ற அண்டை நாடுகளில் ,மின்சார வாகனங்களின் பயன்பாடானது பெரும் அளவில் உள்ள நிலையில், இந்தியாவில் பெரியளவில் பயன்பாடு இல்லை. ஆக இது மின்சார வாகன துறையில் பெரும் புரட்சியை உருவாக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+