இந்திய எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் 2 சக்கர வாகன தயாரிப்பிலும், விற்பனையிலும் முன்னோடியாக இருக்கும் ஓலா நிறுவனம் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வருவதாகப் பல மாதங்களாகக் கூறி வரும் வேளையில் தற்போது நிஜமாகியுள்ளது.
FAME திட்டத்தின் கீழ் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அளிக்குமா என்பது தெரியாமல் இருக்கும் வேளையில் ஓலா நிறுவனம் செபி அமைப்பிடம் ஐபிஓ வெளியிடுவதற்கான DRHP அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

ஓலா-வின் DRHP அறிக்கையை ஆய்வு செய்த பின்பு செபி ஐபிஓ வெளியிட ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த சில மாதங்களில் இந்திய பங்குச்சந்தைக்கு வரும். இதனால் ஓலா-வின் ஐபிஓ பொதுத் தேர்தலுக்கு முன்பு வருமா அல்லது பின்பு வருமா என்பது முக்கியமான கேள்வி.
ஓலா-வின் ஐபிஓ மிகவும் முக்கியமானது, இந்தியாவில் இதுவரையில் எந்தொரு EV நிறுவனமும் பங்குச்சந்தையில் இல்லை, ஏற்கனவே பங்குச்சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் எலக்டரிக் வாகனம் தயாரித்தாலும், டெஸ்லா போல் ஒரு முழு EV நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் இல்லை.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் செஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி உலகமே அறியும், இதேபோன்ற மேஜிக்-ஐ ஓலா செய்யுமானால், முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக ஓலா மாறும். ஏற்கனவே ஓலா பேட்டரி தொழிற்சாலை, கார் உற்பத்திக்கான டிசைன் ஆகியவற்றைக் கிருஷ்ணகிரியில் உருவாக்கி வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் கடந்த 20 ஆண்டுகளில் எந்தொரு வாகன தயாரிப்பாளரும் ஐபிஓ வெளியிடாத நிலையில் ஓலா-வின் ஐபிஓ அனைத்து முதலீட்டாளர்களுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இதற்கு முன்பு 2003ல் நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் களம் இறங்கியது. இதன் பின்பு தற்போது ஓலா.
ஓலா-வின் DRHP அறிக்கையின் படி இந்த ஓலா நிறுவனம் இந்த ஐபிஓ மூலம் சுமார் 5500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது மட்டும் அல்லாமல் நிறுவனத்தை 8 பில்லியன் டாலர் அளவில் மதிப்பிட உள்ளது.
ஓலா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் இந்த ஐபிஓ மூலம் 47.4 மில்லியன் பங்குகள், அதாவது மொத்த பங்குகளில் சுமார் 1.3% பங்குகளை ஐபிஓ வழியாக விற்க உள்ளார். இதன் மூலம் பாவிஷ் அகர்வால் 90-100 மில்லியன் டாலர் தொகையைப் பெற உள்ளார்.
பாவிஷ் அகர்வால்-ஐ தொடர்ந்து சாப்ட்பேங்க் விஷன் ஃபண்ட் 23.8 மில்லியன் பங்குகளையும்), டைகர் குளோபல் 6.4 மில்லியன் பங்குகளையும், ஆல்பா வேவ் குளோபல் 3.8 மில்லியன் பங்குகளையும், மேட்ரிக்ஸ் கூட்டாளிகள் இந்தியா 3.7 மில்லியன் பங்குகளையும் மற்றும் டெமாசெக் 1.3 மில்லியன் பங்குகளையும் விற்க உள்ளது. இதேதொடர்ந்து ப்ரோமோட்டர் நிறுவனமான இன்டஸ் டிரஸ்ட் இந்த ஐபிஓ-வில் 4.2 மில்லியன் பங்குகளை விற்க உள்ளது.
பாவிஷ் அகர்வால் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் 36.9 சதவீத பங்குகளை வைத்துக்கொண்டு பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து ஓலா டாக்சி சேவையை நடத்து ANI Technologies 4.4 சதவீத பங்குகளையும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் நிறுவனமான இண்டஸ் டிரஸ்ட் 3.9 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
2017ல் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு பவிஷ் அகர்வால் இந்நிறுவனம் தனது தொழிற்சாலை, உற்பத்தி அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது. நாட்டின் மொத்த இரு சக்கர எலக்ட்ரிக் வாகன சந்தையில் இந்நிறுவனம் 30 சதவீத பங்கினை கொண்டுள்ளது ஓலா.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications