இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு விலை இன்று காலை வர்த்தகத்தில் தடாலடியாக 20 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்கியூட் அளவீட்டைத் தொட்டு 132.76 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. ஐபிஓ-வில் ப்ரீமியம் விலையில் பட்டியலிட முடியாமல் மாட்டிக்கொண்ட ஓலா தற்போது முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கி வருகிறது.
ஓலா நிறுவனத்தின் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஓலா-வின் வருவாய் 32% அதிகரித்து ரூ.1,644 கோடியை எட்டியதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டது. மேலும், ஆகஸ்ட் 15 அன்று ஓலா தனது முதல் எலக்ட்ரிக் பைக் சீரியஸ்-ஐ விலை உடன அறிமுகப்படுத்தியது.

ஓலா நிறுவனம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது வருவாயில் சிறப்பான உயர்வைப் பதிவு செய்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் இக்காலாண்டு நிறுவனத்தின் நஷ்டத்தின் அளவீடு ரூ.347 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் நஷ்டத்தின் அளவு ரூ.267 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓலா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் மொத்த வருவாய் 34% அதிகரித்து ரூ.1,722 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் வரிக்கு பிந்தைய நஷ்டத்தின் அளவு ரூ.233 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இழப்பு ரூ.189 கோடியாக இருந்தது. பேட்டரி பிரிவு ரூ.5 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. வரிக்கு பிந்தைய நஷ்டத்தின் அளவு ரூ.37 கோடியாக உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் பங்கு விலை இன்று காலை வர்த்தகத்தில் துவங்கும் போது 119.30 ரூபாய் விலையில் துவங்கிய, 117 ரூபாய் வரையில் குறைந்து அதிகப்படியாக அப்பர் சர்கியூட் அளவான 132.76 ரூபாய் அளவீட்டைத் தொட்டு அசத்தியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஜூன் காலாண்டு முடிவில் அதிகப்படியான வருவாயும், எலக்ட்ரிக் பைக் அறிமுகம் தான்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது, இதோடு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு முதல் சொந்தமாக தயாரிக்கும் பேட்டரிகளை தனது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பயன்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வந்த ஓலா எலக்ட்ரிக் நேற்று மூன்று புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ததுள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.74,999 ஆரம்ப விலையில் ரோட்ஸ்டர், ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் புரோ எனும் மூன்று புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரோட்ஸ்டர் சீரியஸ் வெவ்வேறு விலை மற்றும் செயல்திறன் திறன்களை கொண்டு சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஓலா ரோட்ஸ்டர் X விலை நிலவரம்:
ஓலா ரோட்ஸ்டர் X 2.5 kWh - 74,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் X 3.5 kWh - 84,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் X 4.5 kWh - 99,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் விலை நிலவரம்:
ஓலா ரோட்ஸ்டர் 3.5 kWh - 1,04,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் 4.5 kWh - 1,19,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் 6 kWh - 1,39,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் Pro விலை நிலவரம்:
ஓலா ரோட்ஸ்டர் Pro 8 kWh - 1,99,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் Pro 16 kWh - 2,49,999 ரூபாய்


Click it and Unblock the Notifications