இ-ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக்கின் சேவை குறைபாடுகள் தொடர்பான நுகர்வோர் புகார்களை சரிசெய்ய மத்திய அரசு தலையிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இ-ஸ்கூட்டர் தொடர்பாக புகார் அளித்ததைத் தொடர்ந்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திடம் காரணம் கேட்டு நேரில் வந்து ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அக்டோபர் 3-ஆம் தேதிக்கான ஷோகாஸ் நோட்டீஸில், ஓலா எலக்ட்ரிக் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன் பல விதிகளை மீறுவதாக புகார் எழுந்துள்ளது, இதில் சேவைகளில் உள்ள குறைபாடுகள், தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் உரிமை மீறல்கள் ஆகியவை அடங்கும். நோட்டீசுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகாரத் துறையின் கீழ் செயல்படும் தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு ஓலா இ-ஸ்கூட்டர்கள் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யக்கோரி கடந்த ஆண்டு 10,644 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் செப்டம்பர் 1-ஆம் தேதி 2023 முதல் ஆகஸ்ட் 30, 2024 வரை வந்த புகார்களாகும்.
இவற்றில், 3,389 புகார்கள்.. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, அதன் இ-ஸ்கூட்டர்களுக்கு சேவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக எழுந்தவைகளாகும். மேலும் 1,899 புகார்கள் புதிய வாகனங்களை டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அளிக்கப்பட்ட புகார்களாகும். மீதமுள்ள 1,459 புகார்கள் வழங்கப்படாத சேவைகளுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.
நுகர்வோர் குற்றச்சாட்டுகளில் உற்பத்தி குறைபாடுகளுடன் விற்பனையான வாகனங்கள், இரண்டாம் கை வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிகழ்வுகள், சர்வீஸ் செய்தபோதும் மீண்டும் மீண்டும் குறைபாடுகள், அதிக கட்டணம், துல்லியமற்ற சலுகைகள் மற்றும் பேட்டரிகள் தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேவைகளில் உள்ள குறைபாடுகள், தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் உரிமை மீறல்கள் உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பல விதிகளை ஓலா எலக்ட்ரிக் மீறியிருப்பதாக ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் (CCPA) இருந்து ஷோ காஸ் நோட்டீஸைப் பெற்றதை ஒப்புக்கொண்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் CCPA க்கு முறையான பதிலைத் தாக்கல் செய்வதாகவும் அறிவித்துள்ளது. இது அதன் செயல்பாடுகளை பாதிக்காது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
2025-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் 347 கோடி ரூபாய் நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இருந்த ரூ.267 கோடி நஷ்டத்தில் இருந்து அதிகமாகும். இருப்பினும், இதன் செயல்பாடுகள் மூலம் வருவாய் கடந்த ஆண்டை விட 32.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications