எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. வெறும் ரூ.39,999 விலைக்கு மாடலைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாடல்களின் விலை ஓலாவின் முந்தைய மாடல்களை விடவும் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் விலை மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஓலாவின் CEO பவேஷ் அகர்வால் X தளத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Ola S1 இசட் மற்றும் ஜிக் ரேஞ்ச் மாடல்களின் விலை ரூ.39 ஆயிரத்தில் இருந்து தொடங்கும் என பவேஷ் தெரிவித்துள்ளர். அவை போர்ட்டபிள் பேட்டரி பேக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு மாடல்களுக்கான முன்பதிவுகளை நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், இவை ஏப்ரல் 2025 முதல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா தற்போது 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வழங்குகிறது. அதில் இரண்டு வரவிருக்கும் புதிய மாடல்களாக ஒலா கிக் (ரூ.39,999) மற்றும் கிக் பிளஸ் (ரூ.49,999) மற்றும் எஸ்1 இசட் (ரூ.59,999)மற்றும் எஸ் 1 இசட் பிளஸ் (ரூ.64,999) ஆகும். அதேபோல், ஏற்கனவே உள்ள தி எஸ்1 ஏர் (ரூ.1,00,499), தி எஸ்1 ப்ரோ (ரூ.1.34 லட்சம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Ola S1 கிக் மற்றும் கிக் பிளஸ்: இந்த மாடல் கிக் தொழிலாளர்களுக்காக ஓலாவால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுகிய மற்றும் நீண்ட பயணங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இது கிக் மற்றும் கிக் பிளஸ் என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. கிக் ஆரம்ப விலை ரூ. 39,999, கிக் பிளஸ் ஆரம்ப விலை ரூ. 49,999. கிக் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 112 கிலோமீட்டர் பயணிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ எனவும், அதே கிக் ப்ளஸ் மாடல் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Ola S1 Z and Z பிளஸ்: இந்த மாடல் இசட் மற்றும் இசட் பிளஸ் வகைகளிலும் கிடைக்கிறது. ஆரம்ப விலை ரூ. 59,999 மற்றும் ரூ.64999 ஆக விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மாடல்களில் போர்ட்டபிள் பேட்டரிகள் உள்ளன. அவை மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன. இந்த மாடல்களுடன், ஓலா பவர் பாட் இன்வெர்ட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு இன்வெர்ட்டர் ஆகும். கையடக்க பேட்டரிகள் மூலம் இவற்றை இயக்கலாம் இதன் விலை ரூ. 9,999 ஆகும். பிரீமியம் S1 Z பிளஸ் மாடல் வெறும் 4.7 வினாடிகளில் 0-40 கி.மீ- ஐ கடக்கும் திறன் கொண்டது. இது 14-இன்ச் டயர்களைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களும் கூடுதலான சுமை சுமக்கும் திறனுக்காக முன் மற்றும் பின்பகுதியில் கேரியர்களை இணைக்கும் விருப்பத்தை வழங்குகின்றன. இது கிக் தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications