பட்ஜெட் விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஓலா அறிமுகம்.. விலை என்ன தெரியுமா..?

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, குறிப்பாக இரு சக்கர வாகன பிரிவில்.

இந்தியாவின் முன்னணி பிராண்டுகளின் IC இன்ஜின் கொண்ட வாகனங்களின் விலை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தாலும், பெட்ரோல் விலையும் பெரிய அளவில் உயர்ந்துள்ள காரணத்தாலும் மக்கள் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை வாங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் சாமானிய மக்கள் வாங்க முடியாத விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும் நிலையில் ஓலா நிறுவனம் IC இன்ஜின் கொண்ட வாகனங்களுக்கு இணையான விலையில் புதிய மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக்

இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஓலா எலக்ட்ரிக், மலிவு விலை பிரிவில் புதிதாக ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம் முழுக்க ஐசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்களை வாங்குவோரையும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விருப்பம் இருந்தும் வாங்க முடியாதவர்களுக்காகவே ஓலா அறிமுகம் செய்துள்ளது.

ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டர்

ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டர்

ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டர்-ஐ இந்நிறுவனம் 84,999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. ஆனால் தீபாவளி பண்டிகைக்காக அக்டோபர் 24ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு இதே பைக்-ஐ 79,999 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் 24 வரையில் கிட்டத்தட்ட 5000 ரூபாய் வரையில் பணத்தைச் சேமிக்க முடியும்.

பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது ஓலே எஸ்1 ஏர் ஸ்கூட்டர்-க்கான புக்கிங் துவங்கப்பட்டு உள்ள நிலையில், 999 ரூபாய் கொடுத்து புக் செய்ய உள்ளது. இப்புதிய ஓலே எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான புக்கிங் பிப்ரவரி 2023 வரையில் சிறந்திருக்கும், மேலும் டெலிவரி ஏப்ரல் 2023 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

விலை

விலை

ஓலா இதற்கு முன்பு அறிமுகம் செய்த ஓலா எஸ் விலை 99000 ரூபாய், எஸ்1 ப்ரோ 1,29,000 ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது புதிதாக ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டர் விலை 84999 ரூபாய் இது தள்ளுபடியில் 79999-க்கு அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டர் 2.5kwH பேட்டரி பே கொண்டு 100 கிலோமீட்டர் மைலேஜ் கொண்டு உள்ளது.

வசதிகள்

வசதிகள்

இந்தப் பைக்-ஐ அதிகப்படியாக 85 கிலோமிட்டர் வேகத்தில் இயக்க முடியும். இந்தப் புதிய பைக்-ல் எக்னாமிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடு உள்ளது, OTA அப்டேட், ரிவர்ஸ் மோடு, ப்ளூடூத், ஜிபிஎஸ் இணைப்பு, சைடு ஸ்டான்டு அலர்ட், ரிமோட் பூட் அன்லாக் சேவையும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+