ஓலா கொடுக்கும் விழாக்கால சலுகை.. எவ்வளவு தள்ளுபடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓலா மின்சார வாகன சந்தையில் மிகப்பெரிய புரட்சியினை ஏற்படுத்தலாம் பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழகத்தில் பிரம்மாண்ட ஆலையில் உற்பத்தி செய்து வருகின்றது.

 

தனது வணிகத்தினை தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகின்றது.

முதல் முறையாக ஆஃபர்

முதல் முறையாக ஆஃபர்

முதல் முறையாக ஓலாவின் எஸ் 1 ப்ரோ வாகனத்திற்கு தள்ளுபடி சலுகையினை அறிவித்துள்ளது. இது மின்சார வாகனங்களில் விலை குறைய வாய்ப்பாக அமையும் எனலாம்.

பொதுவாக விழாக்கால பருவம் என்றாலே வாகன விற்பனை நிறுவனங்கள் பல்வேறு அறிவிப்புகளை கொடுக்கும். பல்வேறு கேஸ்பேக் சலுகைகள், தள்ளுபடி என பலவும் இருக்கும். ஆனால் அத்தகைய சலுகைகள் மின்சார வாகனங்களுக்கு கிடைப்பதில்லை.

மின்சார இருசக்கர வாகனங்கள் மீது ஆர்வம்

மின்சார இருசக்கர வாகனங்கள் மீது ஆர்வம்

இந்தியா மின்சார வாகனங்களை ஊக்குவிக்க பல திட்டங்களை வகுத்து வருகின்றது. பல நாடுகளிலும் சுற்றுசூழலை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இன்றும் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் பெரியளவில் இல்லை. அதற்காக கட்டமைப்புகள் இல்லாதது பெரியளவில் இல்லை என்பது முக்கிய காரணமாக இருந்தாலும், தற்போது மின்சார இருசக்கர வாகனங்கள் மீது ஆர்வம் காட்டப்படுகின்றது.

எவ்வளவு தள்ளுபடி
 

எவ்வளவு தள்ளுபடி

அந்த வகையில் ஓலாவின் மின்சார வாகனங்கள் விற்பனையானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தற்போது விழாக்கால பருவத்தில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து 10,000 ரூபாய் தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓலாவின் எஸ் 1 ப்ரோ வாகனத்தின் ஆரம்ப விலையானது (Ex show room) 1.40 லட்சம் ரூபாயாகும். ஏற்கனவே இந்த தள்ளுபடி விற்பனை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

எப்போது வரையில் சலுகை

எப்போது வரையில் சலுகை

இது குறித்து ஓலா தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. ஓலாவின் இந்த தள்ளுபடி சலுகையினை பயன்படுத்தி 10,000 ரூபாய் தள்ளுபடியுடன் கொண்டாடுங்கள். இன்னும் சில நிதி ஆப்சன்களும் காத்துக் கொண்டுள்ளன. இந்த சலுகைகள் அக்டோபர் 05, 2022 தசரா வரையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி பெறுவது?

எப்படி பெறுவது?

இந்த சலுகையினை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் ஓலாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று லாகின் செய்து பெற்றுக் கொள்ளலாம். ஆக விருப்பமுள்ள வாடிக்கையளார்கள் இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் சலுகை தவிர்த்து 1.30 லட்சம் ரூபாய் வரை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola ஓலா
English summary

Ola Electric offers festive discounts on S1 pro: How much discount do you get?

Ola Electric offers festive discounts on S1 pro: How much discount do you get?/ஓலா கொடுக்கும் விழாக்கால சலுகை.. எவ்வளவு தள்ளுபடி..!
Story first published: Tuesday, September 27, 2022, 10:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X