இந்தியாவில் ஆப்லைன், ஆன்லைன் ரீடைல் வர்த்தகம் குறித்து பல வகையில் விவாதம் செய்யப்பட்டாலும், சமீபத்தில் ஆன்லைனில் மட்டும் இருக்கும் நிறுவனங்கள் ஆப்லைன் விற்பனைக்குள் வர வேண்டியது கட்டாயம் என பேசப்பட்டு வருகிறது.
இப்படியிருக்கையில் சமீபத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்குள் நுழைந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி வரும் ஓலா நிறுவனம் முதன் முதலாக தனது வர்த்தகத்தை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செய்து வந்த நிலையில், தற்போது ஆப்லைன் வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது. ஆனால் Ola Electric-இன் இந்த ஆஃப்லைன் ஸ்டோர் ஐடியா குழப்பத்தில் உள்ளதாக ஜெயந்த் முந்திரா தனது சமுக வலைத்தள பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

ஓலா நிறுவனத்திடம் எலக்ட்ரிக் வாகன விற்பனை பிரிவில் சந்தைப் பங்கு அதிகமாக இருந்தாலும், ஆழமான தரவுகளை ஆய்வு செய்யும் போது பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு ரீடைல் ஸ்டோர் கூட இல்லை.
அனைத்து விற்பனைகளும் ஓலா கேப்ஸ் ஆப் வாயிலாக லீட் ஜெனரேஷன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு நவம்பர் முதல், இந்தியா முழுவதிலும் ரீடைல் ஸ்டோர் உடன் அனுபவ மையங்களைத் அதாவது cum experience சென்டர் திறந்தது. இதன் படி நவம்பர் 2022ல முதல் கடை திறக்கப்பட்டது, ஜனவரி 2023ல் 100 கடைகள், ஏப்ரல் 2023ல் 500 கடைகள், ஜூன் 2023ல் 700 கடைகள், ஆகஸ்ட் 2023ல் 1000 கடைகளை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்தது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இவ்வளவு பெரிய பான்-இந்தியா ஸ்டோர் விரிவாக்கம், அதுவும் குறைந்த காலக்கட்டத்தில் இதுவரையில் யாரும் பார்த்து இல்லை. ஆனால் இங்கிருந்து தான் டிவிஸ்ட், துவங்க உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கடைகளே இல்லாதபோது ஓலா 16 ஆயிரம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்தது. ஆகஸ்ட் மாதத்தில், இது வெறும் 18 ஆயிரம் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்தது. இங்கே இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையில் பாதி விற்பனை கடைகள் வழியாகவும், மீதமுள்ள பாதி பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓலா கேப்ஸ் ஆப் மூலமாகவும் நடந்ததாகக் கருதினாலும், சராசரியாக ஒரு கடையில் மாதத்திற்கு 9 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. அதாவது 3 நாட்களில் ஒன்று ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலை தான் உள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசாங்கம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களைக் குறைக்காமல் இருந்திருந்தால், விற்பனை 2 மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்று நம்பி கணக்கிட்டாலும். ஓலா தனது 1000 கடைகளில் 3 நாட்களில் வெறும் 2 ஸ்கூட்டர்கள் மட்டும் தான் விற்பனை செய்திருக்கும்
ஓலா ஸ்கூட்டர்களை தினமும் கோடிக்கணக்கான மக்களுக்கு தனது ஆப் வாயிலாக விளம்பரப்படுத்தும் ஓலா கேப்ஸ் போன்ற ஆப்ஸ் இல்லாத டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 15,500 ஸ்கூட்டர்களையும், ஏதர் எனர்ஜி 7,100 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்திடம் தோராயமாக 250 ஸ்டோர்களும், எதர் எனர்ஜியிடம் 150 ஸ்டோர்களும் உள்ளது.
அப்படியானால் சராசரியாக டிவிஎஸ் டீலர் ஒரு நாளுக்கு 2 ஸ்கூட்டர்களை விற்கிறார், Ather ஸ்டோர் சராசரியாக இரண்டு நாட்களுக்கு 3 ஸ்கூட்டர்களை விற்கிறது. இதன் மூலம் ஆஃப்லைன் வர்த்தகத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை விட இரண்டு நிறுவனங்களும் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன என சமுகவலைத்தளத்தில் ஜெயந்த் முன்நிதிரா பதிவிட்டு உள்ளார்.
ஓலா நிறுவனத்திற்கு நகரங்களிலும், இளம் தலைமுறையினரிடமும் அதிகப்படியான வரவேற்பு இருந்தாலும், ஆப்லைன் வர்த்தகத்தில் ஓலா வளர்ச்சி அடைய கடிமையாக பணியாற்ற வேண்டும். இதேபோல் டிஜிட்டல் வர்த்தக யுகத்தில் டிவிஎஸ் மற்று ஏதர் தனது ஆன்லைன் கேம்-ஐ விரிவாக்கம் செய்ய வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications