இந்திய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பிரிவில் பல முன்னணி நிறுவனங்களை ஓரம்கட்டும் வகையில் ஓலா நிறுவனத்தின் பிரம்மாண்ட தொழிற்சாலை மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தனது இரு மாடல் ஸ்கூட்டர் அறிமுகத்தின் மூலம் உறுதி செய்துள்ளது.
இந்த ஸ்கூட்டர்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் மத்திய மாநில அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை மூலம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்கவும், விற்பனை பிரிவை நாடு முழுவதையும் விரிவாக்கம் பணிகளைத் துவங்கியுள்ள நிலையில், அதிகப்படியான நிதி தேவை உருவாகியுள்ளது. இதைத் தீர்க்க முக்கியமான முடிவை எடுத்துள்ளது ஓலே எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம்.
பாவிஷ் அகர்வால்
பாவிஷ் அகர்வால் தலைமை வகிக்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தனது தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் உற்பத்தி மேம்பாடுகளுக்காக 100 மில்லியன் டாலர் அளவிலான கடனை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் கடனாகப் பெற்று நிலையில் தற்போது புதிதாக 1 பில்லியன் டாலர் அளவிலான கடனை பெறத் திட்டமிட்டுள்ளது.
ஜேபி மோர்கன் உடன் கூட்டணி
இந்த மாபெரும் முதலீட்டுத் திட்டத்திற்குப் பாவிஷ் அகர்வால் தலைமை வகிக்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கியான ஜேபி மோர்கன் உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்தக் கூட்டணி மூலம் வெளிநாட்டில் இருக்கும் பெரும் பங்கு முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
தற்போது இத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் ஜேபி மோர்கன் மத்தியில் முதலீட்டு திரட்டல் குறித்து இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் வளர்ச்சி அடைய மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் முதலீட்டைத் திரட்டுவது எளிது எனக் கருத்து சந்தையில் நிலவுகிறது.
பங்குகளை விற்பனை
இந்த முதலீட்டுச் சுற்றில் ஏற்கனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதனால் முதலீட்டுச் சுற்றில் debt-to-equity ratio சரியாக நிலை நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி
2021 துவக்கத்தில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் கீழ் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனத்தை ஓலா நிர்வாகம் உருவாக்கியது. இந்த நிறுவனத்தை ஜூன் மாதம் தான் முறையாகப் பதிவு செய்தது, தற்போது ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும், தாய் நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் கீழ் உள்ளது.
கிருஷ்ணகிரி தொழிற்சாலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மாபெரும் தொழிற்சாலையின் முதல் கட்ட பணிகளுக்காக 10 ஆண்டுக் கடன் திட்டம் வாயிலாகப் பாங்க் ஆப் பரோடா வங்கியிடம் இருந்து சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான கடனை பெற ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தக் கடனை தான் தற்போது ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனத்தின் பெயரில் மாற்றியுள்ளது ஓலா நிர்வாகம்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications