டெஸ்லா கார் நிறுவனத்தின் எலான் மஸ்க் சற்றுமுன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் வரியைக் குறைக்கும் வரையிலும் இந்தியாவில் தங்களது வாகனங்களை சர்வீஸ் செய்ய அனுமதிக்கும் வரையிலும் கார் தொழிற்சாலையை தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள இந்தியாவின் ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் Thanks, but no thanks என பதிலளித்துள்ளார்.
எலான் மஸ்க் அவர்களின் டுவிட்டுக்கு பவிஷ் அகர்வால் அளித்த இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது திடீரென தீப்பிடித்து எரிந்த போதிலும் எலக்ட்ரிக் வாகனத்துக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
எலக்ட்ரிக் கார்
இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தை அடுத்து நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனத்தையும் தயாரிக்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1000 ஏக்கர் நிலம் மற்றும் 10,000 கோடி முதலீட்டை இந்த திட்டத்திற்காக கொண்டு வர ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கி வருவதாக கூறப்படுகிறது.
500 ஏக்கர்
ஓலா நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளதாகவும் அதில் உலகின் மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1000 ஏக்கர்
அதேபோல் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக 1000 ஏக்கர் நிலத்தை தேடும் பணியில் இருப்பதாகவும், இந்த ஆண்டுக்குள் 1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அதன்பின் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல் எலக்ட்ரிக் கார்
ஓலா நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என ஏற்கனவே பவிஷ் அகர்வால் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே.
எலக்ட்ரி கார் பேட்டரி
மேலும் எலக்ட்ரிக் காருக்கான பிரத்யேகமாக பேட்டரி அமைக்கும் பணியும் தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அரசாங்கம் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘Thanks, but no thanks
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அவர்கள் இன்று டுவிட்டர் பயனாளி ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'இந்தியாவில் வரியை குறைக்காத வரையில் டெஸ்லா நிறுவனம் கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த டுவிட்டிற்கு பவிஷ் அகர்வால், 'Thanks, but no thanks என கூறியுள்ளார். இந்த டுவிட்டில் உள்ள ஆழ்ந்த நகைச்சுவையை டுவிட்டர் பயனாளிகள் ரசித்து வருகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications