இந்திய ஆட்டோமொபைல் சந்தையைப் புரட்டிப்போடக் களமிறங்கியிருக்கும் ஓலா நிறுவனம் தனது புதிய ஓலா எலட்ரிக் ஸ்கூட்டர்-க்கான புக்கிங் சேவையைத் துவங்கிய 24 மணிநேரத்தில் 1 லட்சம் பேர் புக் செய்து ஓலா நிறுவனத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ஏற்கனவே கணித்தது போல், டெஸ்லாவின் வெற்றிக்குப் பின் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மக்களின் ஈர்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. ஆனால் அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்படும் காரணத்தால் இதை வாங்குவதற்குச் சற்றுத் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த இடத்தைத் தான் இரு சக்கர வாகன பிரிவில் ஓலா தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை விடவும் குறைவாக இருக்கும் என ஓலா நம்பிக்கை அளித்துள்ள காரணத்தால் புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் புக் செய்துள்ளனர் என ஓலா அறிவித்துள்ளது.
பாங்க் ஆப் பரோடா வங்கி
ஓலா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையிலும், கட்டுமான பணிகளுக்காகப் பாங்க் ஆப் பரோடா உடன் 100 மில்லியன் டாலர் அளவிலான கடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மக்களின் வரவேற்பு
இந்தத் தயாரிப்புப் பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே புக்கிங்-ஐ துவங்கியுள்ள ஓலா நிறுவனத்திற்குத் தற்போது மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு மிகப்பெரியது. ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைத்து வருகிறது.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை
மேலும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பியூச்சர்ஸ், திறன், மைலேஜ் மற்றும் முக்கியமான விலை விபரம் ஆகிய அனைத்தையும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என ஓலா தெரிவித்துள்ளது.
விளம்பர வீடியோ
சமீபத்தில் ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டியப்படி வெளியான ஒரு விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications