ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்குப் புதிய நிறுவனமான இருந்தாலும் விற்பனையில் மாஸ் காட்டி வருகிறது என்றால் மிகையில்லை.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை பிற நாடுகளைப் போல் அல்லாமல் மிகவும் போட்டி நிறைந்த சந்தை என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் போட்டியை சமாளிக்க முடியாமல் வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெற முடியாமல் இந்தியாவை விட்டு வெளியேறிய நிறுவனங்கள் ஏராளம்.
இப்படியிருக்கும் நிலையில் இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் பெரும் கனவு உடன் வந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு இந்த ஆண்டுப் போராட்டம் நிறைந்த ஆண்டு என்றால் மிகையில்லை. ஆனாலும் விற்பனை அளவுகளைப் பார்த்தை பாராட்டும் படியாகவே உள்ளது.
ஓலா எலக்ட்ரிக்
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் துவக்கம் முதல் நிர்வாகத்தில் பிரச்சனை, உயர்மட்ட அதிகாரிகள் வெளியேற்றம், ஊழியர்கள் பணிநீக்கம், எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எறிந்தது, மத்திய அரசு விசாரணையில் தரமற்ற பேட்டரி தான் உண்மை வெளியானது, ஓலா எலக்ட்ரிக் தலைவர் சிஇஓ பதவியை விட்டு விலகியது, சிஇஓ பாவிஷ் அகர்வால் மீது ஊழியர்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என ஓலா எலக்ட்ரிக் பல விமர்சனங்களை எதிர்கொண்டது.
1.5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
இதை விட முக்கியமாக 2022 ஆம் ஆண்டில் அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்கள் கொண்ட பட்டியலில் ஓலா-வும் உள்ளது. இந்த நிலையிலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டுத் தான் இதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ மக்களிடம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பாவிஷ் அகர்வால்
இந்த நிலையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவன தலைவர் பாவிஷ் அகர்வால் புதன்கிழமை வெளியிட்ட போஸ்ட்-ல் ஓலா விரைவில் மாஸ் மார்கெட் ஸ்கூட்டர் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள், மாஸ் மோட்டார்சைக்கிள் பிரிவில் பல வாகனங்களை அடுத்த 2 வருடத்திற்குள் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
பெட்ரோல் இன்ஜின்
மேலும் பாவிஷ் அகர்வால் 2022 ஆம் ஆண்டை Beginning of the End for ICE Age அதாவது பெட்ரோல் இன்ஜின் கொண்ட வாகனங்களுக்கு முடிவு காலம் 2022 முதல் துவங்குகிறது, இனி இருசக்கர ஆட்டோமொபைல் எதிர்காலம் எலக்ட்ரிக் தான் எனப் பாவிஷ் அகர்வால் கூறுகிறார்.
எலக்ட்ரிக் தான் எதிர்காலம்
2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் விற்பனை செய்யப்படும் அனைத்து இரு சக்கர வாகனங்களும் எலக்ட்ரிக் ஆகத் தான் இருக்கும், 2030க்குள் அணைத்து கார்களும் எலக்ட்ரிக் ஆகத் தான் இருக்கும் எனத் தனது பதிவில் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
புதிய வாகனம்
ஓலா நிறுவனம் தற்போது Ola S1 Pro, Ola S1, மலிவு விலை பிரிவில் Ola S1 Air வாகனம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வர உள்ளது, இந்த வாகனம் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் எலக்ட்ரிக் கார் பிரிவில் முதல் காரை 2024ஆம் ஆண்டிலும், 2027ஆம் ஆண்டில் 6 எலக்ட்ரிக் கார்களையும் அறிமுகம் செய்ய ஓலா எலக்ட்ர்க் திட்டமிட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications