இந்தியாவின் பிரபல டிஜிட்டல் மேப்பிங் சேவை நிறுவனமான மேப்மை இந்தியா, தனது தரவுகளை திருடியதாகவும், ஓலா மேப்ஸை உருவாக்க உரிம ஒப்பந்தத்தை மீறியதாகவும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவன ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஐபிஓ வெளியிடத் தீவிரமாகத் தயாராகி வரும் வேளையில் இந்த வழக்கு பெரும் தலைவலியாக பாவிஷ் அகர்வால்-க்கு மாறக்கூடும் என தெரிகிறது. உண்மையில் ஓலா செய்தது என்ன..? ஏதற்காக இந்த திருட்டு வழக்கு..?
ஓலா நிறுவனத்திற்கு மேப்பிங் சேவை வழங்கியுள்ள மேப்மை இந்தியாவின் தாய் நிறுவனமான சிஇ இன்போ சிஸ்டம்ஸ், ஓலா தனக்கு சொந்தமான தரவுகளை காப்பி அடித்துள்ளதாகவும், உரிமம் பெற்ற ப்ராடெக்ட்-ஐ இணைத்து, ரிவிர்ஸ் இன்ஜினியரிங் செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து சிஇ இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனம் ஓலா-வுக்கு அனுப்பிய சட்ட ரீதியான நோட்டீஸ்-ல் "நீங்கள் எங்கள் கிளையின்ட் API (அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ்) மற்றும் SDK களை (சாப்ட்வேர் டெவலப்மெண்ட் கிட்களை) காப்பி அடித்துள்ளீர்கள். எங்கள் வாடிக்கையாளரின் பிரத்யேக தரவுகளை, உங்களின் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ஓலா மேப்ஸ் உருவாக்கியுள்ளீர்கள். இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவுகளைத் திருடி இதை உங்கள் லாப நோக்கத்திற்காகப் பயன்படுத்தியுள்ளீர்கள்" என்று இந்த நோட்டீஸ்-ல் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை முதலில் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது.
இந்த மாதம், நாட்டின் முன்னணி ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, சொந்தமாக டிஜிட்டல் மேப்பிங் சேவையான ஓலா மேப்ஸை அறிமுகப்படுத்தியது. இந்த ஓலா மேப்ஸ் சேவையை தனது சொந்த டேட்டா மற்றும் ஓப்பன் டேட்டா, ஓலா வாகனங்களின் ரியல் டைம் டேட்டா மற்றும் ஓப்பன் சோர்ஸ் அரசு தரவுகள், ஓபன்ஸ்ட்ரீட்மேப்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என ஓலா தெரிவித்தது.
ஆனால் தற்போது மேப்மை இந்தியா, ஓலா நிறுவனம் ஓலா மேப்ஸ் சேவைக்காக தனது தரவுகளை திருடியதாகவும், ஓலா மேப்ஸை உருவாக்க உரிம ஒப்பந்தத்தை மீறியதாகவும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளது.
ஓலா நிறுவனர் மற்றும் சிஇஓ பவிஷ் அகர்வால் Ola Maps-ஐ அறிமுகம் செய்யும் போது "கடந்த மாதம் Azure சேவையை பயன்படுத்துவதை நிறுத்தியதைத் தொடர்ந்து, நாங்கள் இப்போது முழுமையாக கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவதை விட்டு வெளியேறியுள்ளோம். Google Maps சேவையைப் பயன்படுத்துவதற்காக நாங்கள் வருடத்திற்கு ரூ.100 கோடி செலவிட்டோம், ஆனால் இந்த மாதம் எங்கள் சொந்த ஓலா மேப்ஸுக்கு மாறுவதன் மூலம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை" என்று எக்ஸ் பதிவில் கூறினார்.


Click it and Unblock the Notifications