இந்தியர்களுக்கே உரிய ஒரு திறமை, எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சிறிய ஐடியா மூலம் செலவே இல்லாமல் பிரச்சனையைத் தீர்க்கும் புத்திசாலித்தனம் இருக்கும். இதனாலேயே 2017ல் jugaad என்ற வார்த்தை ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி-யில் சேர்க்கப்பட்டது.
இப்படி ஓலா ஸ்கூட்டர் வைத்து திருமணத்தையே நடத்திவிட்ட சம்பவம் தான் தற்போது இணையத்தில் டிராண்டாகி இருக்கும் விஷயமாகும். இதுமட்டும் அல்லாமல் இது தொடர்பான பதிவை ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால்-ம் பகிர்ந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

சமீபத்தில் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க விழாவில் கலந்துகொண்ட ஓலா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் பாவிஷ் அகர்வால், ஓலாவின் கிருஷ்ணகிரி தொழிற்சாலையின் வெற்றியில் தமிழ்நாடு அரசின் பங்கீடு குறித்தும், அவருடைய மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் பெருமையாகக் கூறியது யாராலும் மறக்க முடியாது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோவில், ஒரு ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் மணமகள் டான்ஸ் ஆட தயாராகிக்கொண்டு இருந்த வேளையில், திருமணம் நடக்கும் இடத்திற்குப் போலீஸ் அதிகாரிகள் வந்து ஸ்பீக்கரில் பாட்டுப் போட கூடாது என ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்டு உள்ளனர்.
இதனால் மணமகள் பல நாட்களாகப் பிராக்டீஸ் செய்யப்பட்ட டான்ஸ் ஆட முடியாதோ எனக் கண்ணீர் வடிக்கத் துவங்கிய நிலையில் மணமகள் நண்பர்கள் ஓலா ஸ்கூட்டரை மண்டபத்திற்குள் கொண்டு வந்து ஸ்டேஜ்-க்கு அருகில் நிறுத்தி, ஸ்கூட்டரில் இருக்கும் ஸ்பீக்கர் உடன் ப்ளூடூத் வாயிலாகக் கனெக்ட் செய்து, பாட்டு போடப்பட்டு மணமகள் நினைத்தது போலவே டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இன்ஸ்டாவில் டிரெண்டாகியுள்ளது.
இன்ஸ்டா வீடியோவை பார்த்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பாவிஷ் அகர்வால் தனது டிவிட்டரில் ஷேர் செய்தது மூலம், இந்த வீடியோ இந்தியா முழுவதும் டிரெண்டாகியுள்ளது. இந்திய மக்களின் கொண்டாட்டத்தில் ஓலா ஸ்கூட்டர்கள் ஒரு பகுதியாக மாறியுள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.
ஓலா ஸ்கூட்டர்களில் ஸ்பீக்கர் சேவை இருப்பது பலருக்கும் பிடித்தமான சேவையாக மாறியுள்ளது. சாலையில் சென்றுகொண்டு இருக்கும் போது திடீரென பாட்டு சத்தத்துடன் ஒரு ஓலா ஸ்கூட்டர் வரும்போது அறியாமல் புன்னகை வரும், இத்தகைய சின்ன விஷயம் தான் பலரையும் கவர்ந்து ஓலா ஸ்கூட்டர்களை வாங்க தூண்டுகிறது.


Click it and Unblock the Notifications