500 பேரை பணிநீக்கம் செய்ய முடிவா..? ஓலா ஊழியர்களின் நிலைமை என்ன..?

செலவை குறைப்பது உள்பட ஒரு சில காரணங்களுக்காக சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஓலா நிறுவனமும் சுமார் 400 முதல் 500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஊழியர்கள் தாங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டால் தங்கள் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குறியுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை நீக்கம்

வேலை நீக்கம்

கடந்த சில மாதங்களாக பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஓலா நிறுவனமும் தங்களுடைய சில ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

 காரணம்

காரணம்

ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு ஒரே காரணம் செலவுகளை குறைப்பது மட்டுமே என ஓலா நிறுவனத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக சரியாக பணி செய்யாத ஊழியர்கள் யார் யார் என்பதை கண்டறியும் படி ஒவ்வொரு பிரிவின் மேனேஜருக்கும் ஓலா தலைமை அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்போது பணிநீக்கம்

எப்போது பணிநீக்கம்

இன்னும் ஒரு சில மாதங்களில் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இன்னும் ஒருசில நாட்களில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக்

ஓலா நிறுவனம் ஏற்கனவே ஓலா கார்ஸ், ஓலா டாஷ் ஆகிய தொழில்களை மூடிவிட்ட நிலையில் தற்போது அந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஐபிஓ

ஐபிஓ

இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டிருக்கும் ஓலா நிறுவனம், அதற்கு முன்னர் நிறுவனத்தின் செலவுகளை கணிசமாக குறைக்கும் முயற்சியே இந்த 500 ஊழியர்கள் வேலை நீக்கம் என்று கூறப்படுகிறது.

பணி நியமனம்

பணி நியமனம்

மின்சார இருசக்கர வாகனம் மற்றும் மின்சார கார் உற்பத்தியில் மிகுந்த கவனம் செலுத்திவரும் ஓலா நிறுவனம் அந்த பிரிவுக்காக ஆட்களை தேர்வு செய்யவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓலா நிறுவனம் தற்போது சுமார் 5000 பணியாளர்களை மின்சாரம் வாகனங்கள் தயாரிப்பதற்காக நியமனம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிக்கை ஒன்று கூறுகின்றது.

1400 ஊழியர்கள்

1400 ஊழியர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் ஓலா நிறுவனத்தின் வருவாய் சுமார் 95 சதவீதம் சரிந்தது என்பதும் 2020ஆம் ஆண்டில் ஏற்கனவே ஓலா நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய்

வருவாய்

கடந்த மாதம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2022 - 23 ஆம் நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 500 கோடி ரூபாய் வருவாயை தாண்டி உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் இந்த நிதி ஆண்டில் ஒரு பில்லியன் டாலர் வருவாய் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+