இந்திய எலக்ட்ரிக் வாகன பிரிவில் குறிப்பாக இரு சக்கர வாகன பிரிவில் சிறிதும் பெரிதுமாக பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வரும் வேளையில் ஓலா, ஏதர்-க்கு போட்டியாக பட்ஜெட் விலையில், அதிகப்படியான மைலேஜ் கொண்ட வாகனம் அறிமுகமாகியுள்ளது.
மின்சார வாகன உற்பத்தியில் தனக்கென சிறிய வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தை பெற்று கலக்கி வரும் புனேவை தலைமையிடமாகக் கொண்ட ஐவூமி (iVoomi) நிறுவனம், புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஜீட்எக்ஸ் இசட்எக்ஸ் (JeetX ZE) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.80,000 மட்டுமே, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், முழு சார்ஜில் 170 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது. மேலும் இது மூன்று வெவ்வேறு மாடல்களில் கிடைக்கிறது.
மேலும் நார்டோ கிரே (Nardo Gray), அல்ட்ரா ரெட் (Ultra Red), மற்றும் அர்பன் கிரீன் (Urban Green) போன்ற எட்டு வண்ணங்களில் மக்களுக்கு தேர்வு செய்யும் ஆப்ஷனை இந்த ஸ்கூட்டர் அளிக்கிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகன சந்தையில் வெற்றி பெறுவது கடினமாக இருந்தாலும் அனைத்து நிறுவனம் முக்கியமான பிரேக்பாயின்ட்-க்காக காத்திருக்கின்றனர்.
ஜீட்எக்ஸ் இசட்இ ஸ்கூட்டரில், 2.1 கிலோவாட் திறன் கொண்ட பிஎல்டிசி மோட்டருடன் இணைக்கப்பட்ட 3 கிலோவாட் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காம்போ இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மணிக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க உதவுகிறது. இது நகரப் பயன்பாட்டுக்கு ஏற்றது, தொலைதூர பயணத்திற்கு சரியானதாக இருக்காது.
சார்ஜிங் வேகம் குறித்து பார்க்கும்போது, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 5.5 மணி நேரம் ஆகிறது. மேலும், 2.5 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இது 7 ஆம்பியர் திறன் கொண்ட ஹோம் சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். பேட்டரிக்கு ஐந்து வருடங்கள் அல்லது 50,000 கிலோமீட்டர் வரையிலான உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
முன்புறத்தில் 75மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளையும், பின்புறத்தில் 60மிமீ ஸ்பிரிங் லோடட் யூனிட்டையும் கொண்டுள்ள இதன் சஸ்பென்ஷன் அமைப்பு எளிதான பயணத்தை வழங்குவதாக கூறப்படுக்கிறது. ஒவ்வொரு சாலையிலும், ஒவ்வொருவருக்கும் இது மாறுப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் JeetX ZE வாகனத்தில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளது. குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சங்களாக ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் ஜியோ-ஃபென்சிங் போன்றவை இதில் அடங்கும்.


Click it and Unblock the Notifications