ஓலா நிறுவனத்திற்கு போட்டியா புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. சிம்பிள் எனர்ஜி-யின் புதிய பைக்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மோகம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இத்துறையில் ஓலா-வின் ஆதிக்கத்தை உடைக்க பல நிறுவனங்கள் முயற்சி செய்து வரும் வேளையில் சிம்பிள் எனர்ஜி புதிய வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது லேட்டஸ்ட் தயாரிப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் டாட் ஒன்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரில் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,999. லட்சத்துக்கு ஒரு ரூபாய் கம்மி.
இந்த விலை முன்கூட்டியே ரிஜிஸ்டர் செய்த வாடிக்கையளர்களுக்குத் தான்.

ஓலா நிறுவனத்திற்கு போட்டியா புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. சிம்பிள் எனர்ஜி-யின் புதிய பைக்..!

புதிய வாடிக்கையாளர்களுக்கான அறிமுக விலை 2024 ஜனவரியில் தான் தெரிவிக்கப்படும். சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டர் வாங்குவதற்கான ஆன்லைன் புக்கிங் இப்போது நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் முந்திக் கொள்ளுங்கள். இப்போதைக்கு ஒரே மாடலில் தான் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகிறது. சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டரில் ஒரு பிக்ஸட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 151 கி.மீட்டர் மைலேஜ் தரும் என கம்பெனி தெரிவித்துள்ளது.

நம்ம ரெட், பிரேஸன் பிளாக், கிரேஸ் ஒயிட், அஷ்யூர் புளூ ஆகிய நான்கு கலர்களில் ஸ்கூட்டர் கிடைக்கும். அறிமுகச் சலுகையாகவும் ஏராளமான வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கும் இணங்கி லைட்எக்ஸ் மற்றும் பிரேஸன் எக்ஸ் ஆகிய கலர்களிலும் கேட்டவர்களுக்கு ஏற்றபடி கிடைக்கும்.

முதலில் பெங்களூரில் தொடங்கி படிப்படியாக பிற நகரங்களில் இந்த ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படும். டாட் ஒன் ஸ்கூட்டரில் அதிகபட்ச ரோடு கிரிப் கொண்ட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பிரிவில் புதிய பெஞ்சுமார்க்காக அதிவேக இருசக்கர எலக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என்றும் மணிக்கு ஜீரோ டூ 40 கி.மீட்டர் வேகத்தை 2.77 நொடிகளில் எட்டும் திறன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்பின் இருபக்கமும் 12 இஞ்ச் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவையிரண்டுமே 90-90 டியூப்லெஸ் டயர்களாகும். இந்த ஸ்கூட்டர் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ரைடிங் அனுபவத்தைத் தரும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

3.7 கி.வாட் பேட்டரி கெப்பாசிட்டியுடன் 8.5 கி.வாட் எலக்ட்ரிக் மோட்டாரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. பீக் டார்க் அவுட்புட் 72 72 Nm கொண்டது. பாதுகாப்பு அம்சங்களாக CBS(கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம்), தரமான டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. டாட் ஒன் ஸ்கூட்டர் சீட்டின் கீழ் 35 லிட்டர் கொள்ளளவில் பொருட்கள் வைத்துக் கொள்ளலாம்.

இத்துடன் யூஸர் ஃபிரண்ட்லி டச்ஸ்கிரீன் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரும் உள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டர் சவாரியை ஒரு சுகமான அனுபவமாக மாற்றுவதற்காகச் செய்யப்பட்டுள்ளதாக சிம்பிள் எனர்ஜி தெரிவித்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய்க்குள்ளான எலக்ட்ரிக் வாகனத்தில் சிறந்ததொரு படைப்பாக சிம்பிள் டாட் ஒன் ஸ்கூட்டர் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+