ஹோலி பண்டிகை பொதுவாக வட இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படுவது வழக்கம், ஆனால் மகிழ்ச்சியும் கொண்டாட்டம் நிறைந்த பண்டிகை என்பதால் தற்போது இளம் தலைமுறையினர் நாடு முழுவதும் கொண்டாட துவங்கியுள்ளனர்.
இதேவேளையில் பிற பண்டிகை போலவே இந்த ஹோலி பண்டிகைக்கும் பல நிறுவனங்கள் பல விதமாக விளம்பரம் செய்துள்ளது. அதில் முக்கியமான இந்திய எலகட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் கலக்கி வரும் ஓலா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் தொழிற்சாலையை கொண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஓலா நிறுவனம் கியூட்டான ஒரு வீடியோ தயாரித்து, அதை அந்நிறுவன தலைவர் பாவிஷ் அகர்வால் டிவிட்டரிலும், லின்கிடுஇன் பதிவிலும் வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோவில் ஓலா தொழிற்சாலை ஊழியர்கள், தொழிற்சாலைக்கு முன்பு ஹோலி பண்டிகையை கொண்டாடிய நிலையில் இதை பார்த்த இரண்டு ரோபோ தனது பங்கிற்கு ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பல வண்ணங்களில் பெயின்ட் அடித்து கொண்டாடியுள்ளது.


Click it and Unblock the Notifications