இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஓலா, ஆன்லைன் டாக்சி சேவை துறையில் இருந்து ஆட்டோமொபைல் துறைக்குள் வந்து இன்று பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக நிற்கிறது. அயன் படத்தில் வருவது போல.. எல்லாம் டெக்னாலஜி, பையன் புடிச்சிட்டான் என பாவிஷ் அகர்வால்-ஐ இந்திய ஆட்டோமொபைல் துறை வியந்து பார்க்கிறது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பை அதிகரிக்க மிக முக்கிய தடையாக இருப்பது வாகனங்களுக்கான பேட்டரி தான். தற்போதும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இப்படியிருக்கும் வேளையில் இந்த நிலையை மாற்றவும், ஓலா தனது எலக்ட்ரிக் கார் கனவை அடையவும் பேட்டரி தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது.

ஓலாவின் புதிய பேட்டரி தொழிற்சாலை தற்போது கிருஷ்ணகிரியில் இருக்கும் ஸ்கூட்டர் தொழிற்சாலைக்கு அருகிலேயே அமைக்கப்பட உள்ளது. ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது டிவிட்டரில் பேட்டரி தொழிற்சாலையான ஓலா ஜிகாபேக்ட்ரியின் முதல் தூண் நிறுவப்பட்ட போது செய்யப்பட்ட பூஜை முதல் தூண் நிறுவும் அசத்தலான டிரோன் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
இது மட்டும் அல்லாமல் ஓலா ஜிகா பேக்ட்ரியின் பணியாற்றும் அணி குளோபல் EV துறையின் இந்தியாவை முக்கிய ஹப் ஆக மாற்ற போகிறது என்பது பெருமையாக உள்ளதாகவும் டிவிட்டரில் #endICEAge என்ற முக்கிய ஹேஷ்டேக் உடன் முடித்தார்.

இந்த ஓலா ஜிகா பேக்ட்ரி சுமார் 115 ஏக்கரில் அமைய உள்ளது, 2024 ஆம் ஆண்டுக்குள் பேட்டரி உற்பத்தி பணிகள் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்தியாவின் மிகப்பெரிய செல் பேக்டரியாக இருக்கும் என தெரிகிறது. ஓலா கிருஷ்ணகிரியில் சுமார் 100 ஜிகாவாட் சக்தி கொண்ட ஜிகாபேக்டரியை உருவாக்க திட்டமிட்டு உள்ள நிலையில் இந்த 115 ஏக்கரில் ஆரம்ப கட்டமாக 5 ஜிகாவாட் முதல் துவங்கப்பட்டு அதன் பின் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஓலா இந்த புதிய ஜிகாபேக்டரி மூலம் மற்றொரு சாதனையை படைக்க உள்ளது, அதாவது மேகமாக கட்டப்படும் செல் பேக்டரி ஆக இது இருக்கும் என்றும் உற்பத்தி துறையில் புதிய மாற்றத்தை இதன் மூலம் காட்டவும் உள்ளதாக ஓலா நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் கார் உருவாக்குவதை முக்கிய இலக்காக கொண்டு இருக்கும் வேளையில் இதை சாத்தியமாக்க பெங்களூரில் மிகப்பெரிய மற்றும் அதிநவீன cell R&D சென்டரை ஓலா அமைந்துள்ளது. இங்கிருந்து தான் ஓலா-வின் தொழில்நுட்ப அடிப்படையிலான வளர்ச்சி மேம்பட உள்ளது.

ஓலா நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஓலா எலக்ட்ரிக் இரு சக்கரம், எலக்ட்ரிக் 4 சக்கரம், பேட்டரி ஆகியவை தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளது.
இது மட்டும் அல்லாமல் இந்த ஒப்பந்தம் வாயிலாக ஓலா, தமிழ்நாட்டில் EV ஹப் அமைக்கும். கிருஷ்ணகிரியில் ஒரே இடத்தில் மேம்பட்ட செல் மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி வசதிகள் முதல் விற்பனையாளர் மற்றும் சப்ளையர் பூங்காக்கள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஒட்டுமொத்த எகோசிஸ்டத்தை ஒரே இடத்தில் அமைக்க உறுதி அளித்துள்ளது.
இதன் மூலம் அடுத்த 40 வருடத்திற்கு ஓலா நிறுவனத்தின் உற்பத்தி தலைநகரமாக கிருஷ்ணகிரியும், தொழில்நுட்ப தலைநகரமாக பெங்களூர் இருக்கும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications