எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விற்பனையில் கடந்த மாதம் ஆச்சரியப்படவைக்கும் ஒரு சம்பவம் நடந்தது. சுற்றுச்சூழலை பாதிக்காத இந்த வாகன விற்பனை கடந்த மாதம் 17 சதவீதம் வருடாந்திர அடிப்படையில் தடாலடியாக உயர்ந்தது.

அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 74,252 வாகனங்கள் விற்பனையானது. இது அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் 63,706 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையானது. பல சிக்கல்கள் சிரமங்கள் இருந்தபோதும் வாகன நிறுவனங்கள் தங்களது சாதனையை தாங்களே முறியடித்து மகிழ்ந்தனர். இந்த விற்பனை சாதனை, எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத் துறையில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபரில் சிறப்பாகச் விற்பனையான டாப் மூன்று நிறுவனங்கள் ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகும். OLA Electric கடந்த மாதம் 23,644 வாகனங்களை விற்றது. இது செப்டம்பரில் 18,615 ஆக இருந்தது. இது மாதாந்திர வளர்ச்சியில் 27% அதிகமாகும்.
இதேபோல் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் TVS மோட்டார் கடந்த மாதம் 16,340 வாகனங்களை விற்றது. இது செப்டம்பர் மாதத்தில் 15,576 ஆக இருந்தது. இது 5% மாதாந்திர அடிப்படையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை பொறுத்தவரை, கடந்த மாதம் 8,289 வாகனங்களை விற்றுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 7,087 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் மாதாந்திர அடிப்படையில் 26% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் மின்சார சந்தையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அக்டோபர் மாதத்தின் விற்பனை எண்ணிக்கையை ஆய்வு செய்து பார்க்கும் போது டாப் ஐந்து நிறுவனங்களின் மாதாந்திர வளர்ச்சியைக் கணக்கிட்டால், குறிப்பிடத்தக்க வகையில் 82% மாதாந்திர அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
அக்டோபரில் சில நிறுவனங்கள் சந்தையில் சக்கைப்போடு போட்டன.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஹீரோ மோட்டோகார்ப் அதிக வளர்ச்சியுடன் முன்னணியில் உள்ளது. சுமார் 261 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் VIDA V1 PRO இல் கிட்டத்தட்ட 40,000 ரூபாய் தள்ளுபடியை வழங்கியது. இதன் விற்பனை தடாலடியாக உயர்ந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications