ஓலா நிறுவனத்தின் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பிரிவான க்ருத்ரிமில் பணியாற்றி வந்த இளம் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பணிச் சுமை தாளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகில் சோம்வன்ஷி என்ற பொறியாளர் கடந்த மே 8-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தற்போது அது தொடர்பான ரெட்டிட் பதிவு பேசுபொருளாகியுள்ளது. அந்தப் பதிவின் அடிப்படையில் தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
நிகில் சோம்வன்ஷி இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸில் பட்டம் பெற்றவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் க்ருத்ரிமில் பணிபுரியத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தில் இவருடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இறப்புக்கு 2 வாரங்களுக்கு முன்பே நிகில் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்திவிட்டார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

நிகிலின் இறப்பு குறித்து பேசிய க்ருத்ரிம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், "மிகவும் திறமையான இளம் ஊழியர்களில் நிகிலும் ஒருவர். நிகிலின் மறைவு எங்களை வருத்தமடையச் செய்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவருடைய குடும்பம், நண்பர்கள், அன்புக்குரியவர்கள் போன்றோருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள்", என்று தெரிவித்தார்.
மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் நிகில் லீவில் இருந்ததாகவும், ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று உடல்நிலை சரியில்லை என்றும், தேறி வருவதற்காக கூடுதல் ஓய்வு எடுத்துள்ளதாகவும் நிகில் கூறியுள்ளார். ஆனால் அவர் அலுவலகத்திற்கு திரும்புவதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பரவலாக பகிரப்பட்ட நிகில் குறித்த ரெட்டிட் பதிவில் க்ருட்ரிமின் பணி கலாச்சாரம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக ஒரு பிராஜக்ட்டை நிர்வகிக்கும் 3 பேர் கொண்ட குழுவில் தான் நிகிலும் பணியாற்றியிருக்கிறார். அந்த குழுவில் இருந்து 2 பேர் வெளியேறிய பிறகு அந்த முழு பொறுப்பையும் நிகில் மட்டுமே செய்து வந்ததாகவும், பதிவில் கூறப்பட்டுள்ளது.
அதோட அந்நிறுவனத்தின் சீனியர் ஒருவர் புதிதாக வரும் ஊழியர்களை கடுமையாக திட்டுவதாகவும், அவர்களை துன்புறுத்துவதாகவும் பதிவில் கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் அந்த சீனியர் கான்ஃபரன்ஸ் கால் மூலம் ஊழியர்களுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்துள்ளார். பெங்களூருவில் உள்ள குழுவின் முழு செயல்பாட்டையும் நிகில் மட்டுமே சுமக்க வேண்டி இருந்துள்ளது. முன்னாள் ஊழியர் ஒருவரும் இந்தச் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியுள்ளார். "அந்த சீனியருக்கு கையாளும் திறன் இல்லை என்றும், அவர் ஊழியர்களிடம் மட்டுமே தனது கோபத்தை காண்பிப்பார்" என்றும் கூறியிருந்தார்.
"நிகிலுடன் பணியாற்றிய ஊழியர் தற்போது உள்ள ஊழியர்கள் ஊடகங்களுடனும், காவல் துறையினருடனும் பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் பல ஊழியர்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு சோகம் நடந்தும் எந்த மாற்றமும் இல்லை, அமைதி மட்டுமே நிலவுகிறது. அதிகாரிகள் இந்த செய்தியை மறைக்க முயற்சி செய்கிறார்கள்" என்றும் அந்த ரெட்டிட் பதிவில் கூறப்பட்டிருந்தது.
ஓலா நிறுவனம் இது குறித்து கூறுகையில், "ஒரு நிறுவனமாக இந்த இழப்பு குறித்து நாங்கள் மணமுடைந்து போயுள்ளோம். நிகில் மதிப்புமிக்க ஊழியர்.. அவர் இல்லாமல் இருப்பது பணியாற்றிய அனைவராலும் கண்டிப்பாக உணரப்படும் விஷயமாக இருக்கும். மேலும் நிகிலின் குடும்பத்தினருக்கு,ம் ஊழியர்களுக்கும் நாங்கள் முழு ஆதரவையும் வழங்கி வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். தேவைப்படும் உதவிகளை தொடர்ந்து வழங்குவோம்" என்றும் கூறியிருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications