சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வந்த ஓலா எலக்ட்ரிக் மூன்று புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.74,999 ஆரம்ப விலையில் ரோட்ஸ்டர், ரோட்ஸ்டர் எக்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் புரோ எனும் மூன்று புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு முதல் தனது சொந்த பேட்டரி செல்களை தயாரித்து தனது வாகனங்களில் பயன்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் மேலும் இரண்டு புதிய மோட்டார் சைக்கிள் மாடல்களான ஸ்போர்ட்ஸ்டர் மற்றும் ஏரோஹெட் ஆகியவற்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரோட்ஸ்டர் சீரியஸ் வெவ்வேறு விலை மற்றும் செயல்திறன் திறன்களை கொண்டு சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஓலா ரோட்ஸ்டர் X விலை நிலவரம்:
ஓலா ரோட்ஸ்டர் X 2.5 kWh - 74,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் X 3.5 kWh - 84,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் X 4.5 kWh - 99,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் விலை நிலவரம்:
ஓலா ரோட்ஸ்டர் 3.5 kWh - 1,04,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் 4.5 kWh - 1,19,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் 6 kWh - 1,39,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் Pro விலை நிலவரம்:
ஓலா ரோட்ஸ்டர் Pro 8 kWh - 1,99,999 ரூபாய்
ஓலா ரோட்ஸ்டர் Pro 16 kWh - 2,49,999 ரூபாய்
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஎம்டி பவிஷ் அகர்வால் பேசுகையில், "இந்தியாவின் இரண்டு சக்கர வாகன சந்தையில் மூன்றில் இரண்டு பங்கு மோட்டார் சைக்கிள்களாக உள்ளன, ஓலா இந்த பிரிவில் நுழைவதன் மூலம், இந்திய இரண்டு சக்கர வாகன பிரிவில் எலக்ட்ரிக் வாகன ஊடுருவல் மேலும் துரிதப்படுத்தப்படும்" என்று பவிஷ் அகர்வால் கூறினார்.
ஓலா பேட்டரி செல்கள்
ஓலா நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனது சொந்த பேட்டரி செல்களை தனது வாகனங்களில் இணைக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஓலா ஜிகாஃபேக்டரியில் தற்போது செல் சோதனை உற்பத்தி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரியில் உள்ள தனது ஃபியூச்சர்ஃபேக்டரியில் நடைபெற்ற 'சங்கல்ப் 2024' நிகழ்ச்சியில், ஓலா எலக்ட்ரிக் பாரத் 4680 செல் மற்றும் பேட்டரி பேக், புதிய ஜென்-3 தளம் மற்றும் மூவ்ஓஎஸ் 5 இயக்க முறை ஆகியவற்றை அறிமுகம் செய்தது.


Click it and Unblock the Notifications