ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, பிரைம் பிளஸ் என்ற புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரைம் பிளஸ் சேவையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கார்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு வழங்குவதுடன், இலவசமாக கேன்சல் செய்யும் வசதியும் அளிக்கப்படுகிறது. இந்த சேவை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யப்படுமா..?
ஓலா வர்த்தக சாம்ராஜியத்தின் உயிர்நாடியே அதன் ஆன்லைன் டாக்சி சேவை தான், இதை தொடர்ந்து மெருகேற்றும் வகையில் ஓலா தனது ஆன்லைன் டாக்சி சேவை பிரிவில் பிரைம் பிளஸ் என்ற புதிய பிரீமியம் சேவையை முதற்கட்டமாக பெங்களூரில் மட்டும் செயல்படும் என்று ஓலா இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் அறிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை முதல் பெங்களூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இப்புதிய பிரைம் பிளஸ் சேவை ஆரம்பத்தில் கிடைக்கும். அடுத்த சில வாரத்தில் பெங்களூர் வாடிக்கையாளர்களுக்கும், அடுத்த சில மாதத்தில் இந்தியாவின் பிற நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பாவிஷ் அகர்வால் இந்த சேவை அனுபவங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொள்ள அடிக்கடி இதைப் பயன்படுத்துவதாக டிலிட்டரில் கூறினார். புதிய சேவையின் விலை குறித்த விவரங்களை அகர்வால் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் அவர் தனது ட்வீட்டில் பகிர்ந்த முன்பதிவின் ஸ்கிரீன்ஷாட்டில், பயணத்தின் செலவு ஓலா மினி மற்றும் மற்ற வண்டிகளை விட மலிவாக இருந்தது.
பயண தூரத்திற்கான விலை குறைவாக இருந்தாலும் பிரைம் பிளஸ் கட்டணம் கட்டாயம் அதிகமாக தான் இருக்கும், காரணம் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக கேன்சல் செய்யும் சேவையை வழங்குகிறது. கேன்சல் சேவையின் மூலம் ஓலா அதிகப்படியான தொகையை பெறுகிறது.


Click it and Unblock the Notifications