ஓரு வழியாக அறிமுகம் ஆனது ஓலா ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு தெரியுமா..!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மின்சார வாகன சந்தையில் ஒரு வழியாக ஓலா ஸ்கூட்டரானது இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஓலாவின் S1 ரக ஸ்கூட்டர் 121 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலையானது 99,999 ரூபாயாகும். இதே 181 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலை 1,29,999 ரூபாயாகவும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அறிவித்தபடி ஓலா ஸ்கூட்டாரானது 75வது சுதந்திர தின விழாவான இன்று ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. பல்வேறு அம்சங்களில் மின்சார ஸ்கூட்டரானது வெளியிடப்பட்டுள்ளது.

ஓலா ஸ்கூட்டர் விலை

ஓலா ஸ்கூட்டர் விலை

ஓலாவின் S1 ரக ஸ்கூட்டர் 121 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலையானது 99,999 ரூபாயாகும். இதே 181 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலை 1,29,999 ரூபாயாகவும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஸ்கூட்டரானது வெளியிடப்பட்டுள்ளது.

அதிக வேகம் கொண்ட வண்டி

அதிக வேகம் கொண்ட வண்டி

ஓலாவின் S1 மற்றும் S pro சந்தையில் அதிக வேகம் கொண்ட எலெக்ட்ரிக் வண்டியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஓலாவின் இந்த விலை விகிதமானது மாநில அரசின் விலையை சேர்க்கப்படாமல் உள்ளது. இதனுடன் பதிவு கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்கள் சேர்க்கப்படும்.

எப்போது முதல் டெலிவரி

எப்போது முதல் டெலிவரி

நாட்டில் 1000 நகரங்களில் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 8ல் இருந்து வாங்க தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அக்டோபர் மாதத்தில் இருந்து டெலிவரி செய்ய தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வழங்குனர்களுடன் கூட்டு

கடன் வழங்குனர்களுடன் கூட்டு

எனினும் தற்போதைக்கு இந்தியாவுக்கு வெளியில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா தனது விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் கடன் வழங்குபவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாதம் 2,999 ரூபாய் மாத தவணையாக செலுத்த வேண்டியிருக்கும் என்று அறிவித்துள்ளது.

மானியம் உண்டு

மானியம் உண்டு

ஓலாவின் இந்த வாகனங்கள் குறிப்பாக குஜராத், டெல்லி மற்றும் மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மலிவானதாக இருக்கலாம் என்றும், அம்மாநிலங்களில் விலை இன்னும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முதல் கட்டமாக 100 நகரங்களில் 5000 சார்ஜிங் பாயிண்டுகள் இருக்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டெஸ்ட் சவாரிக்கு அனுமதி

டெஸ்ட் சவாரிக்கு அனுமதி

வாடிக்கையாளர்கள் https://olaelectric.com/ என்ற இணைய பக்கத்தில் புக் செய்து கொள்ளலாம். இது அடுத்த 2- 3 மாதங்களில் டெஸ்ட் சவாரி செய்யவும், முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் 1 மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சவாரி முறையைப் பொறுத்து வெவ்வேறு ஒலிகள் எழுப்பப்படும்.

சார்ஜிங் பயன்

சார்ஜிங் பயன்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் S1 10 வண்ணங்களில் வரும். ஓலா எலக்ட்ரிக் எஸ் 1 ஸ்கூட்டரை வெறும் 18 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். 50 சதவிகிதம் சார்ஜ் செய்தாலே 75 கிலோ மீட்டர் வரை இதில் பயணிக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஓலா புரட்சி

ஓலா புரட்சி

ஓலா அறிமுகத்திற்கு முன்பே 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சம் வாகனங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டது. இதுவே மக்கள் மத்தியில் எந்தளவுக்கு மின்சார வாகனங்களுக்கு இடமுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அதோடு உலகின் இரண்டாவது மிகப்பெரிய வாகன சந்தையான இந்தியாவில், ஓலாவின் இந்த பிரம்மாண்ட திட்டம், ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓசூரில் பிரம்மாண்ட ஆலை

ஓசூரில் பிரம்மாண்ட ஆலை

ஓலா நிறுவனம் தனது உற்பத்திக்காக தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் மிகப் பிரம்மாண்ட ஆலையினை கட்டமைத்து வருகின்றது. உலகம் முழுவதுமே மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் இந்த நிலையில், ஓலாவின் இந்த பிரம்மாண்ட ஆலை, உலகமே தமிழகத்தினை திரும்பி பார்க்க வைத்துள்ளது எனலாம்.

ஏற்றுமதி செய்ய திட்டம்

ஏற்றுமதி செய்ய திட்டம்

இங்கு உற்பத்தி செய்யப்படவிருக்கும் வாகனங்கள் இந்தியா மட்டும் அல்ல, ஐரோப்பா, ஆசியா, லத்தீன் உள்ளிட்ட பல சந்தைகளுக்கும் சப்ளை செய்யப்படும் என ஏற்கனவே ஓலா கூறியிருந்தது.

ஓலாவின் இந்த ஆலை உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிலையமாக உருவெடுக்கும். கிட்டதட்ட 10,000 பணியாளர்கள், 3000 ரோபோக்களை கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்தும் கிடைக்கும் ஆலையாக இருக்கும்

அனைத்தும் கிடைக்கும் ஆலையாக இருக்கும்

ஓலாவின் கட்டமைப்பு பணிகள் 2022ம் ஆண்டிற்குள் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று அதன் வாகனங்களை ஓலா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆலை ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மெகா ஆலையாக உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஆலையில் உற்பத்தி, பேட்டரி, பெயிண்ட் கடை, வெல்டிங், மோட்டார், முடிக்கப்பட்ட பொருட்கள், அசெம்பிள் என அனைத்து செயல்பாடுகளும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+