ஆன்லைன் ஆப் மூலமாக வாடகை வாகன சேவை அளித்து வரும் நிறுவனமான ஒலா நிறுவனம், சுமார் 200 ஊழியர்களை மீண்டும் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்டார்ட் அப் துறையில் கடந்த ஆண்டில் இருந்தே தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கையானது இருந்து வருகின்றது. இந்த நடவடிக்கையானது இன்று வரையில் விட்டகுறை தொட்ட குறையாக தொடர்ந்து கொண்டுள்ளது.
இது ஸ்டார்ட் அப் ஊழியர்கள் மத்தியில் மேற்கொண்டு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
வேறு வேலை தேடல்
கடந்த வாரத்தில் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவர், பிசினஸ் டுடேவுக்கு அளித்த பேட்டியில், நான் டெக் குழுவில் பணியாற்றி வந்தேன். பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது வேறு வேலைக்காக முயன்று கொண்டுள்ளேன் என கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பகுதி டெக் மற்றும் ப்ராடக்ட் டீமில் இருப்பதாகவும், அவர்களுக்கு ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2022 நிலவரம்
கடந்த ஆண்டிலேயே ஓலா நிறுவனத்தில் 1100 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருந்தது. இவ்வாறு பணி நீக்கம் செய்யபப்ட்ட ஊழியர்கள் ஓலா கேப்ஸ், ஓலா எலக்ட்ரிக், ஓலா ஃபைனான்ஷியல் சேவை என பல துறைகளிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிலும் இந்த பிரச்சனையானது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
வாகன உற்பத்தியில் கவனம்
ஓலா நிறுவனம் வாடகை வாகன சேவையினை தொடர்ந்து மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்கியுள்ளது. தொடர்ந்து வணிகத்தினை விரிவாக்கம் செய்யும்பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எனினும் இந்த பணி நீக்க நடவடிக்கை குறித்து ஓலா அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் அறிவிக்கவில்லை.
மறுசீரமைப்பு நடவடிக்கை
இதே ஓலாவின் செய்தித் தொடர்பாளர் ஓலா வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக தேவைக்கு அதிகமான ஊழியர்களை நீக்கியது. எனினும் தொடர்ந்து பணியமர்த்தலும் தேவைக்கு ஏற்ப செய்து வருகின்றது. குறிப்பாக வடிவமைப்பு மற்றும் பொறியியல் துறையில் திறன் வாய்ந்த ஊழியர்களை, முக்கிய துறைகளில் பணியமர்த்தியும் வருகின்றது.
ஏற்கனவே ஆலோசனை
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே நிறுவனம் பணியாளர்கள் 200 பேரை பணி நீக்கம் செய்வதற்கு ஆலோசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்த பணி நீக்கம் குறித்தான செய்தியும் வந்துள்ளது.
இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், 2021ம் நிதியாண்டில் நிறுவனம் அதன் வருவாய் விகிதத்தில் 65% சரிவினைக் கண்டு, 689.61 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதே இதன் செயல்பாட்டு லாபம் குறைந்து, 89.82 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 610.18 கோடி ரூபாய் பதிவு செய்யப்பட்ட நஷ்டத்தினை கண்டிருந்தது.
ஓலா வணிகங்கள் நிறுத்தம்
ஏற்கனவ ஓலா நிறுவனம் தொடர்ந்து செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்வேறு, வணிக நடவடிக்கைகளை நிறுத்தியது. தொடர்ந்து டாக்ஸி மற்றும் மின்சார வாகன பிரிவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றது.எனினும் இவ்விரு துறைகளையுமே தீவிரமாக ஆராய்ந்து பல சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. குறிப்பாக டாக்ஸி வணிகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
சில தினங்களுக்கு முன்பு அதன் நிதி வணிகமான Avail Finance வணிகத்திலும் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்தது.


Click it and Unblock the Notifications