ஓலா-வின் புதிய திட்டம்.. பாவிஷ் அகர்வால் பலே கில்லாடி..!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான ஓலா, தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மூலம் டாக்சி சேவையை அளிக்க முடிவு செய்து, இதன் மூலம் இத்துறையில் இருக்கும் சக போட்டி நிறுவனங்கள் மத்தியில் புதிய போட்டி உருவாகியுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் டாக்சி சேவை அளிக்கும் திட்டத்தை பெங்களூரில் சோதனை திட்டமாக துவங்க உள்ளது. இந்த சோதனை திட்டத்தில் நகரத்தின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் கவர் செய்ய வேண்டும் என்பதற்காக சுமார் 1,000 எலக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஓலா செயலியில் தற்போது இருக்கும் வாகன சேவை பிரிவில் அல்லாமல் தனி பிரிவில் இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் டாக்சி சேவை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா சமீபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பிலும், அதன் வர்த்தகத்தில் மட்டுமே ஆதிகப்படியான ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு பாதியில் செலவுகளை குறைக்க ஓலா குழுமத்தின் பல பிரிவுகளில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், பல்வேறு சேவைகளை மூடியும் அறிவிப்பை வெளியிட்டது.

ஆன்லைன் டாக்சி சேவை

ஆன்லைன் டாக்சி சேவை

இந்த நிலையில் ஓலா தற்போது ஆன்லைன் டாக்சி சேவை தளத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை தாமதமாக கையில் எடுத்தாலும், வேகமாக செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது பெங்களூரில் 1,000 எலக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள நிலையில் வருடத்தின் இறுதியில் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

ப்ளூஸ்மார்ட், உபர்

ப்ளூஸ்மார்ட், உபர்

குருகிராம் நகரை தலைமையிடமாக கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களின் மூலம் டாக்சி சேவை அளிக்கும் நிறுவனமான ப்ளூஸ்மார்ட் சமீபத்தில் பெங்களூரில் செயல்படத் தொடங்கியது. இதேபோல் ஓலா-வின் சக போட்டி நிறுவனமான உபர்-ம் சமீபத்தில் டெல்லியில் EV டாக்சி சேவை திட்டத்தின் பைலட் திட்டத்தை தொடங்கியது.

 10000 எலக்ட்ரிக் கார்கள்

10000 எலக்ட்ரிக் கார்கள்

இந்த நிலையில் ஓலா EV டாக்சி சேவையை வேகமாக விரிவாக்கம் செய்ய அடுத்த ஒரு வருடத்திற்குள் சுமார் 10000 வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இந்த முக்கிய இலக்கை அடைய ஓலா நிறுவனம் கார்களை சொந்தமாக வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த கார்களை நிலையான வருமானம் மற்றும் வேரியபிள் பே ஊதியத்துடன் கூடிய ஓட்டுநர்களுக்கு குத்தகைக்கு விட திட்டமிட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

1.5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

1.5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. 2021ல் தான் ஓலா எலக்ட்ரிக் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ மக்களிடம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஓலா  ஸ்கூட்டர் திட்டம்

ஓலா ஸ்கூட்டர் திட்டம்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது Ola S1 Pro, Ola S1, மலிவு விலை பிரிவில் Ola S1 Air வாகனம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வர உள்ளது, இந்த வாகனம் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதர பிற இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

ஓலா எலக்ட்ரிக் கார்  திட்டம்

ஓலா எலக்ட்ரிக் கார் திட்டம்

இதேபோல் எலக்ட்ரிக் கார் பிரிவில் முதல் காரை 2024ஆம் ஆண்டிலும், 2027ஆம் ஆண்டில் 6 எலக்ட்ரிக் கார்களையும் அறிமுகம் செய்ய ஓலா திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் ஓலா தனது டாக்சி தேவைக்கு பிற நிறுவனங்களிடம் இருந்து கார்களை வாங்காமல் சொந்தமாக தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

2வது முறை முயற்சி

2வது முறை முயற்சி

ஓலா நிறுவனம் 2வது முறையாக எலக்ட்ரிக் கார்களை வைத்து தனது டாக்சி சேவையை சோதனை செய்கிறது. 2017 ஆம் ஆண்டு நாக்பூர்-ல் மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து சுமார் 200 எலக்ட்ரிக் கார்கள் சோதனை செய்யப்பட்டது, ஆனால் சில வாரத்திலேயே இத்திட்டம் கைவிடப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+