தமிழகத்திற்கு பெருமை தந்த ஓலா.. சுதந்திர தினத்தன்று அறிமுகம்.. மற்ற விவரங்கள் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலாவின் மின்சார ஸ்கூட்டரானது சந்தைக்கு வரும் முன்னரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஒரு மாபெரும் -புரட்சியை ஏற்படுத்தியது எனலாம்.

வெறும் 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சம் வாகனங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டதாக ஓலா சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இதுவே மக்கள் மத்தியில் எந்தளவுக்கு மின்சார வாகனங்களுக்கு வரவேற்புள்ளடை காட்டுகின்றது.

உண்மையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வாகன சந்தையான இந்தியாவில், ஓலாவின் இந்த பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம், ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 5 வருடத்தில் 2400% வளர்ச்சி.. ராகவ் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்ய முடிவு..! 5 வருடத்தில் 2400% வளர்ச்சி.. ராகவ் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்ய முடிவு..!

எப்போது அறிமுகம்

எப்போது அறிமுகம்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரினை ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓலா தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரினை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 15 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

அதன் விலை குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விலை நிர்ணயமும் ஆகஸ்ட் 15 அன்றே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஓலா நிறுவனம் ஓலா ஸ்கூட்டரருக்கான முன்பதிவினை தொடங்கியது. தொடக்கத்திலேயே மாபெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாகன வண்ணங்கள்

வாகன வண்ணங்கள்

ஏற்கனவே ஓலா 10 வண்ணங்களில் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இது நேரடி விற்பனையை கையில் எடுக்கலாம் என்றும் தெரிகிறது. இது பிரத்யேகமாக டீலர் நெட்வோர்கினை அமைப்பதை விட, நேரிடையாக மக்களுக்கு சேவை செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஓலா 10 வண்ணங்களில் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இது நேரடி விற்பனையை கையில் எடுக்கலாம் என்றும் தெரிகிறது. இது பிரத்யேகமாக டீலர் நெட்வோர்கினை அமைப்பதை விட, நேரிடையாக மக்களுக்கு சேவை செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

ஓசூரில் பிரம்மாண்ட ஆலை

ஓசூரில் பிரம்மாண்ட ஆலை

இந்த ஸ்கூட்டர் உற்பத்திக்காக ஓலா நிறுவனம் ஓசூரில் அமைத்து வரும் பிரம்மாண்ட ஆலையானது ஓரளவு கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்ட உற்பத்தியானது இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதுமே மின்சார வாகனங்களுகாக தேவை அதிகரித்து வரும் இந்த நிலையில், ஓலாவின் இந்த பிரம்மாண்ட ஆலை வரவேற்கதக்க விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

அதிரடி திட்டம்

அதிரடி திட்டம்

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட ஆலையானது, வரும் காலத்தில் மிகப்பெரிய ஆலையாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எலான் மஸ்கின் டெஸ்லா ஆலையை போன்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படவிருக்கும் வாகனங்கள் இந்தியா மட்டும் அல்ல, சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என ஓலா கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

10 மில்லியன் யூனிட் திறன்

10 மில்லியன் யூனிட் திறன்

ஓலாவின் இந்த முழு ஆலையானது 500 ஏக்கர் பரப்பளவில் அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் முழுமையாக 2022ம் ஆண்டில் நிறைவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட ஆலையில் ஆண்டுக்கு 10 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு திறனைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ரோபோக்கள் மூலம் உற்பத்தி

ரோபோக்கள் மூலம் உற்பத்தி

ஓலாவின் இந்த பிரம்மாண்ட ஆலையில் கிட்டதட்ட 10,000 பணியாளர்கள், 3000 ரோபோக்களை கொண்டிருக்கும். தற்போது முன்னிலையில் இருக்கும் இரு சக்கர வாகன நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் தான். இது தற்போது 9.8 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.

அனைத்தும் ஒரே இடத்தில்

அனைத்தும் ஒரே இடத்தில்

ஓலாவின் இந்த ஆலை ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆலையாக உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஆலையில் உற்பத்தி வசதி, பேட்டரி, பெயிண்ட் கடை, வெல்டிங், மோட்டார், முடிக்கப்பட்ட பொருட்கள், அசெம்பிள் என அனைத்து செயல்பாடுகளும் இருக்கும்.

2 நொடிக்கு ஒரு வாகனம் உற்பத்தி

2 நொடிக்கு ஒரு வாகனம் உற்பத்தி

ஓலாவின் இந்த ஆலையில் முழு உற்பத்தி திறனையும் பயன்படுத்தினால், ஒவ்வொரு 2 நொடிகளுக்கும் ஒரு வாகனம் உற்பத்தி செய்யப்படலாம் என்ற ஓலாவின் மதிப்பீடு நினைவு கூறத்தக்கது. உண்மையில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டு வரும் இந்த வாகனங்கள், வரும் காலத்தில் பெரியளவில் வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான இடம் பிடிக்கலாம்

முக்கியமான இடம் பிடிக்கலாம்

ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது சந்தையில் ஒரு முக்கிய இடத்தினை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டி;ல் பெட்ரோல், டீசல் விலையானது உச்சம் தொட்டு வரும் நிலையில், அதற்கு முக்கிய மாற்றாக பார்க்கப்படும் மின்சார வாகனங்கள், வருங்காலத்தில் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்

ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்

அதோடு தற்போது மின்சார வாகனங்களுக்கு பல சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இது இன்னும் மின்சார வாகனங்களை சந்தையில் ஊக்குவிக்கலாம். அதிலும் ஓலா நிறுவனம் பிரம்மாண்ட ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கினை அமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 லட்சம் சார்ஜிங் பாயிண்டுகள்

1 லட்சம் சார்ஜிங் பாயிண்டுகள்

ஓலா நிறுவனம் 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜிங் பாயிண்டுகளையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 100 நகரங்களில் 5,000 சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த சார்ஜிங் பாயிண்டுகள் வாடிக்கையாளார்கள் எளிதில் அடையும் விதமாக இருக்கும்.

எங்கெங்கு சார்ஜிங் பாயிண்டுகள்

எங்கெங்கு சார்ஜிங் பாயிண்டுகள்

குறிப்பாக மால்கள், ஐடி பூங்காக்கள், அலுவலக கட்டிடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் என்றும் ஓலா கூறியிருந்தது.
தற்போதைக்கு இந்த சார்ஜிங் பாயிண்டுகள் இரு சக்கர வாகனங்களுக்காக அமைக்கப்படும். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் 4 சக்கர வாகனங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் என ஓலா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி திறன்

பேட்டரி திறன்


ஓலாவின் இந்த எலெக்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை 18 நிமிடம் சார்ஜ் செய்தால் போதுமானது. இதன் மூலம் நீங்கள் 75 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும் என்கிறது. ஆக சார்ஜிங் பற்றிய கவலையில்லை.

மொத்தத்தில் பல அம்சங்களுடன் வெளி வரும் ஓலா ஸ்கூட்டரானது மின்சார வாகனத்ததில் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola ஓலா
English summary

Ola plans to E-scooter to be launched on Auguest 15,2021; check full details here

OLA CEO Bhavish aggarwal announced the launch date of the e-scooter in Indian market. Ola E-scooter to be launched on august 15, 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X