தமிழகத்திற்கு ஜாக்பாட் தான்.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்கும் ஓலா..!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் இறங்குவதற்காக ஓலா நிறுவனம், தமிழகத்தில் 326 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்தான ஒப்பந்தத்திலும் ஓலா கையெழுத்திட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் தனது வாகன சேவையினை செய்து வரும் ஓலா, ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலமாக எளிதாக தனது சேவையினை வழங்கி வருகின்றது.

மின்சார ஸ்கூட்டர் ஆலை

மின்சார ஸ்கூட்டர் ஆலை

இந்த நிலையில் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக, எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் களமிறங்குவதற்கான முயற்சிகள் இறங்கியுள்ளது. இதற்காக சில மாதங்களுக்கு முன்பு பல மாநிலங்களில் தொழில் சாலைகளை அமைப்பதற்காக பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதன் மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் ஆலையை நிறுவதற்காக 326 மில்லியன் டாலரை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

நிறுவப்படும் இந்த ஆலையால் 10,000 பேருக்கு மேல் வேலையினை பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு 2 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஓலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஓலா அடுத்த இரண்டு காலாண்டுகளில், பல சந்தைகளில் இந்த மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

மிகப்பெரிய ஸ்டார்டப்

மிகப்பெரிய ஸ்டார்டப்

இந்த வணிகத்திற்காக ஓலா நிறுவனம் கடந்த ஆண்டில் ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்ட எடெர்கோவை வாங்கியது. தற்போது இந்த நிறுவனத்தின் உதவியுடன் தான் இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் வாகன விற்பனையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிகிறது. ஓலா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வாகன வணிகம் சார்ந்த ஸ்டார்டப் நிறுவனமாகும்.

ஓலாவின் பிரம்மாண்ட திட்டம்

ஓலாவின் பிரம்மாண்ட திட்டம்

ஓலாவின் இந்த மின்சார வாகன உற்பத்தி ஆலை மூலம், இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் சுற்றுசூழல் அமைப்பை மேம்படுத்த முடியும். இது ஐரோப்பா, ஆசியா, லத்தீன், அமெரிக்கன் வாடிக்கையாளர்களுக்கு பிற சந்தைகளிலும் சேவை செய்யும் என்று கூறினார். உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கான எங்கள் திட்டங்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களின் குறிப்பிடத்தக்க மைல்கல் எனவும் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+