சென்னை: தமிழக அரசுக்கும், ஓலா எலக்ட்ரிக் மொபைலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் முதலீடு குறித்தான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 3,111 பேருக்கு வேலை கிடைத்திடும் வகையில் 4 சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 ஜிகாவாட் மின்கலன் உற்பத்தி திறக் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் முன்னிலையில் போடப்பட்டுள்ளது.
படிப்படியாக முதலீடு?
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த 7614 கோடி ரூபாய் என்பது படிப்படியாக முதலீடு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். இது மின்சார வாகன துறையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக 3,000 பேருக்கு மேலாக வேலை வாய்ப்பினை பெறலாம் என எதிர்பார்க்கப்படுது.
எதற்கு எவ்வளவு முதலீடு?
இந்த 7614 கோடி ரூபாய் முதலீட்டில் ஓலா செல் டெக்னாலஜீஸ் நிறுவனம் 5114 கோடி ரூபாயும், இதே ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் 2500 கோடி ரூபாயும் முதலீடு செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முதல் கட்டமாக, மின் கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலை நிறுவ உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டம் என்ன?
நிறுவ திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலையானது 1.4 லட்சம் கார்கள் ஆண்டுக்கு உற்பத்தி செய்யும் திறன் உடையதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலையானது கிருஷ்ணகிரியில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே தனது நிறுவனத்தின் இருப்பினை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், குறிப்பாக லத்தீன் அமெரிக்கா, ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஓலா நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளிலும் கூட விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.
ஏற்றுமதியும் அதிகரிக்கும்
நாட்டின் வாகன ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழகத்தில், மின்சார வாகன உற்பத்தியினை அதிகரிப்பது, இன்னும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இது மின்சார வாகன சந்தையிலும் தன்னுடைய பங்கினை அதிகரிக்க உதவும். இது மின்சார வாகன ஏற்றுமதியினை மட்டும் அல்ல, உள்நாட்டிலும் அதிகரிக்கலாம். இதனை ஊக்குவிக்க சாலை வரி, பதிவு கட்டணம் என பல கட்டணங்களிலும் சலுகை அளிக்கலாம். இது மேற்கொண்டு மின்சார வாகனத் துறையை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் வேலை வாய்ப்பினையும் அதிகரிக்க முடியும்.
அரசின் இலக்கு
இன்னும் இதுபோன்ற முதலீடுகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், 50,000 கோடி ரூபாய் முதலீடும், இதன் மூலம் 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மின்சார வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் வேலை வாய்ப்பினையும் அதிகரிக்கும். தமிழகத்தின் வளர்ச்சியினையும் ஊக்குவிக்கலாம்.
ஏற்கனவே ஓலா நிறுவனம் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியினை செய்து வருகின்றது. இது ஓசூரில் ஆலை அமைந்துள்ளது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications