வழிக்கு வந்த ஓலா.. வெறும் 80000 ரூபாயில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..! #Deepavali

இந்திய ஆட்டோமொபல் துறையைப் புரட்டிப் போட்டு வரும் எலக்ட்ரிக் வாகனங்கள் இரு சக்கரப் பிரிவில் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்தது.

இதேவேளையில் அடுத்தடுத்து பல நிறுவனங்கள் புதிய மாடல் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் ஓலா முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இதனால் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன துறையில் இருக்கும் முக்கியமான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வகைப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

இரு சக்கர வாகன சந்தை

இரு சக்கர வாகன சந்தை

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமான விலை கொண்ட வாகனங்களைக் காட்டிலும், 1 லட்சம் ரூபாய்க்குக் கீழ் இருக்கும் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை தான் அதிகம். அதிலும் முக்கியமாக ஸ்கூட்டர் பிரிவில் 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவு.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை

ஆனால் பெரும்பாலான முன்னணி பிராண்டுகளின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் நிலையில் விற்பனை எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதைச் சரி செய்யும் பொருட்டு ஓலா நிறுவனம் இந்தத் தீபாவளி பண்டிகையின் போது 80000 ரூபாய் விலையில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாவிஷ் அகர்வால்

பாவிஷ் அகர்வால்

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பாவிஷ் அகர்வால் வெளியிட்ட ஒரு டிவீட்டில் இந்த வருடம் மிகப்பெரிய திட்டத்தை அறிவிக்க உள்ளது. இதன் மூலம் IC இன்ஜின் வாகனங்களின் ஆதிக்கத்தின் முடிவு காலம் 2 வருடத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

 S1 ரக மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

S1 ரக மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி குறைந்த விலையில் புதிய S1 ரக மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் புதிய வகையில் எஸ்1 ஸ்கூட்டரில் பெரும்பாலான சேவைகள் அப்படியே இருக்கும் என்றும், சில சிறிய மாற்றங்கள் உடன் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

IC இன்ஜின் வாகனங்கள்

IC இன்ஜின் வாகனங்கள்

கடந்த வருடம் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சுமார் 1 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதே பிரிவில் மலிவு விலை ஸ்கூட்டர் IC இன்ஜின் கொண்ட வாகனங்களுக்கு இணையான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் ஓலா பெரும் புரட்சியைச் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+