ஓலாவின் செம திட்டம்.. புனேவில் புதிய டெக் செண்டர்.. 1000 வேலை வாய்ப்பு..!

கொரோனாவிற்கு மத்தியில் பற்பல நிறுவனங்கள் பணியாட்களை குறைத்து வருகின்றன. ஆனால் இந்த நெருக்கடியான நிலையிலும் வாடகை வாகன சேவை நிறுவனமான ஓலா நிறுவனம் புனேவின் ஒரு புதிய தொழில் நுட்ப மையத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு அடுத்த சில ஆண்டுகளில் 1,000 பொறியாளர்களையும் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

இது பெங்களுருவிற்கு பிறகு ஓலாவின், இரண்டாவது பெரிய தொழில் நுட்ப மையாகும். அதோடு ஓலாவின் அனைத்து வணிகங்களுக்கும் உலகளாவிய மற்றும் உள்ளூர் தீர்வுகளையும் இது பூர்த்தி செய்யும் என்றும் இதனையறிந்த ஓலாவின் முக்கிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

ஓலாவின் விரிவாக்கம்

ஓலாவின் விரிவாக்கம்

ஆனால் ஓலா அதிகாரி ஒருவர் இந்த காலாண்டில் இறுதிக்குள் புனே அலுவலகம் செயல்படும் என்றும், மூன்று ஆண்டுகளில் 1000 திறமையான தொழில் நுட்ப வல்லுனர்கள் பனியில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார்,

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓலா சான் பிரான்ஸ்சிஸ்கோவில் மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தினை மேம்படுத்தியுள்ளது. அதோடு இந்த மையத்தில் மின்சார மற்றும் இணைக்கப்பட்ட வாகனங்களோடு மேம்படுத்தியது.

 

சிறந்த தொழில்நுட்ப மையம்

சிறந்த தொழில்நுட்ப மையம்

புனே அதன் தொழில்நுட்ப திறமை மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கு நன்கு அறியப்பட்டுள்ளது. ஓலா போன்ற பல தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு விருப்பமான இடமாகவும் அமைகிறது. இந்த நிலையில் தான் ஓலா நிறுவனத்தின் டெக் மையம் அங்கு திறக்கப்பட உள்ளது.

ஓலா மொத்த பணியாளர்கள்

ஓலா மொத்த பணியாளர்கள்

தற்போது ஓலாவின் 4,000 மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 1,500 பேருக்கு மேல் பொறியாளர்களாக உள்ளனர்.

ஓலாவின் போட்டி நிறுவனமான உபெர் நிறுவனம் சமீபத்தில் தான், இந்தியாவில் தனது பொறியல் குழுவை வலுப்படுத்துவதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது ஓலாவிடம் இருந்து அதே போன்ற அறிவிப்பு வந்துள்ளது.

 

உபெர் என்ன சொல்கிறது

உபெர் என்ன சொல்கிறது

உபெர் இந்தியாவை ஒரு தொழில்நுட்ப மையாகவும், உலகத்தினை உருவாக்கவும், புதுமைப்படுத்துவதற்கும், இந்தியாவை நிலை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்துவதே அதன் விரிவான பார்வை என்றும் உபெர் கூறியிருந்தது.

கொரோனாவின் காரணமாக தங்கள் வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பணியமர்த்தல் டெக் மையம் குறித்தான செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இது நல்ல அறிகுறி தான்

இது நல்ல அறிகுறி தான்

கடந்த மே மாதத்தில் இந்தியாவில் 600 பேரை பணி நீக்கம் செய்வதாக உபெர் அறிவித்தது. இதே ஓலா 1,400 பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பணியமர்த்த தொடங்கியுள்ளன.
இது பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதற்கு ஒரு நல்ல அறிகுறிதான். ஒரு இந்திய ஸ்டார்டப் நிறுவனம் வளர்ச்சி கண்டால் அது மிக நல்ல விஷயம் தானே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+