ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ஜூலையில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில், அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
பல எதிபார்ப்புகளுக்கும் மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், வரவிருக்கும் ஜூலை மாதத்தில் அறிமுகப்படும் செய்யப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் இதற்காக பிரம்மாண்ட ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கினை அமைக்க உள்ளதாகவும் ஓலா அறிவித்தது. இதற்கிடையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஸ்கூட்டர் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி திட்டம்
ஓலாவின் இந்த ஸ்கூட்டரினை பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் ஜூலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தயாராகி வரும் நிலையில், அதற்கான செயல்பாட்டிலும் ஈடுபடு வருகின்றது. இதற்கிடையில் நடப்பு ஆண்டிற்குள் சர்வதேச சந்தையிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய சந்தைகளில் கவனம்
இது குறித்து ஓலாவின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால், ஓலா ஸ்கூட்டரை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் உலகம் முழுக்க அறிமுகப்படுத்த உள்ளோம். குறிப்பாக விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளோம். அதன் பிறகு ஐரோப்பிய சந்தைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு முதலீடு?
ஓலா கடந்த ஆண்டே இதற்காக ஓலா 2,400 கோடி ரூபாய் முதலீடு செய்த நிலையில், ஆண்டுக்கு 2 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதற்காக தமிழகத்தில் ஓசூரில் ஆலை அமைத்து வரும் நிலையில், இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை கொடுக்க முடியும் என அறிவித்தத்து
சார்ஜிங் பாயிண்டுகள்
வாடகை வாகன சேவை வணிகத்தில் கொடிகட்டி பறந்து வரும் ஒலா நிறுவனம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியிலும் களமிறங்கியுள்ளது. ஓலா ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதோடு மட்டும் அல்லாது, 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜிங் பாயிண்டுகளையும் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 100 நகரங்களில் 5,000 சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்தது.
இரு சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங்
இந்த சார்ஜிங் பாயிண்டுகள் வாடிக்கையாளார்கள் எளிதில் அடையும் விதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மால்கள், ஐடி பூங்காக்கள், அலுவலக கட்டிடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் என்றும் சமீபத்திய அறிக்கையில் ஓலா கூறியது. ஆக வாடிக்கையாளர்கள் சார்ஜிங் பற்றிய கவலை இல்லாமல் இதனை வாங்கலாம் என்கிறது ஓலா. அதோடு ஓலாவின் இந்த எலெக்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை 18 நிமிடம் சார்ஜ் செய்தால் போதுமானது. இதன் மூலம் நீங்கள் 75 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும் என்கிறது.
வருங்காலத்தில் விரிவாக்கம்
தற்போதைக்கு இந்த சார்ஜிங் பாயிண்டுகள் இரு சக்கர வாகனங்களுக்காக அமைக்கப்படும். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் 4 சக்கர வாகனங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் என அகர்வால் கூறியுள்ளார். எனினும் இந்த வாகனத்தின் விலை நிலவரம் என்ன? என்பது உள்ளிட்ட சில விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications