இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுனமான ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ்-ன் எலக்ட்ரானிக் ஸ்கூட்டரை ஒரே ஆண்டில் 2.65 பேர் பதிவு செய்துள்ளனர். அதாவது சொந்தமாக வாங்கி ரிஜிஸ்ட்ரேஷன் செய்துள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக பதிவு செய்துள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்தது. 2023 டிசம்பரில் மட்டும் 30,219 பேர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஓலா நிறுவனம் 40 சதவீத பங்கை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே டிசம்பரில் இருந்ததைவிட 70 சதவீதம் அதிகமாக ஓலா ஸ்கூட்டர் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. டிசம்பரில் முடிந்த காலாண்டில் மட்டும் 83,963 பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகமாகும்.
அடுத்த மூன்று மாத காலத்திலும் எங்களது ஸ்கூட்டர் முதல் இடத்தைப் பிடிக்கும் என நம்புகிறோம். அந்தளவுக்கு ஓலா ஸ்கூட்டருக்கு பதிவுகள் செய்யப்படுகின்றன. டிசம்பர் டு ரிமம்பர் என்ற திட்டத்தின் கீழ் ஓலா எஸ் 1 புரோ, புரோ, எஸ் 1 ஏர், எஸ் 1 எக்ஸ் மாடல்களை அதிக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அன்ஷுல் காண்டேல்வால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரித்து ஓலா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ஒரே ஆண்டில் 2.65 லட்சம் பதிவு பெற்ற ஒரே நிறுவனம் என்ற பெருமையையும் ஓலா ஸ்கூட்டர் நிறுவனம் பெற்றுள்ளது. 5 மாடல்களில் ஓலா ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படுகின்றன, எஸ் 1 புரோ ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 499. இதுதான் கம்பெனியின் முன்னணி விற்பனை ஸ்கூட்டர். எஸ் 1 ஏர் விலை ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 999 ஆகும்.
இது தவிர எஸ் 1 எக்ஸ், எஸ் 1 எக்ஸ் பிளஸ், எஸ் 1 எக்ஸ் 3 கிலோ வாட், எஸ் 1 எக்ஸ் 2 கிலோ வாட் ஆகிய மாடல்களும் தயாரிக்கப்படுகின்றன. இதனிடையே ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முதல் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் டிராப்டை தயாரித்து கேபிடல் மார்க்கெட் ரெகுலேட்டரான செபியிடம் தாக்கல் செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓலா ஸ்கூட்டர்களை வாங்குவதற்காக அதிகளவில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications