இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்சி நிறுவனமான ஓலா, தனது வாகன ஓட்டுநர்களுக்கு 0% கமிஷன் மாடலை அறிவித்து, நாடு முழுவதும் இதை விரிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் டாக்சி சேவை வர்த்தகம் புதிய பாதையை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது, குறிப்பாக ONDC தளம் வந்த பின்பு இந்த மாற்றம் வேகமாகியுள்ளது.
இந்த புதிய முயற்சியின் கீழ் மூலம் ஆட்டோ, பைக் மற்றும் கார் ஓட்டுநர்கள் தங்களுடைய பணிக்கான முழு பயணக் கட்டணத்தையும் (100%) தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பை இந்த ஜீரோ கமிஷன் மாடல் வழங்க உள்ளது. முதலில் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு பயணத்திலும் சிறு தொகையை இந்த நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும். இதனால் ஓட்டுனர் வருமானத்தில் பாதிப்பு ஏற்படும், ஆனால் இந்த ஜீரோ கமிஷன் மாடல் சற்று வித்தியாசமானது.

ஜீரோ கமிஷன் மாடல் கீழ், ஓலா ஒரு புதிய 30 நாள் ஓலா பாஸை ஓட்டுனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஓட்டுநர்கள் தினசரி ரூ.67 வீதம், மாதத்திற்கு ரூ.2,010 என்ற கட்டணத்தில் இந்த சலுகையைப் பெற அனுமதிக்கிறது. இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான ஓலா ஓட்டுநர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலாவின் 0% கமிஷன் மாடல்:
ஓலாவின் புதிய 0% கமிஷன் மாடல், ஓட்டுநர்களுக்கு பயணக் கட்டணத்தில் முழு வருவாயையும் பெறுவதற்கு வழிவகுக்கிறது. ஓட்டுநர்கள் தங்கள் ஒவ்வொரு பயணத்திற்கும் பெறும் கட்டணத்தில் 100% தக்கவைத்துக்கொள்ளலாம், எந்த கமிஷனும் ஓலாவிற்கு செலுத்த வேண்டியதில்லை. பொதுவாக கட்டணத்தில் 20-30% தொகையை கமிஷனாக ஓலாவுக்கு செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும்:
இந்த சலுகை ஆட்டோ, பைக் மற்றும் கார் (Ola Autos, Ola Bikes, Ola Cabs) ஆகிய அனைத்து வகைகளுக்கும் பொருந்தும். ஓட்டுநர்கள் எத்தனை பயணங்கள் மேற்கொண்டாலும் அல்லது எவ்வளவு வருமானம் ஈட்டினாலும், 0% கமிஷன் பொருந்தும்.
30 நாள் ஓலா பாஸ்:
ஓட்டுநர்கள் தினசரி ரூ.67 செலுத்தி, 30 நாட்களுக்கு (மொத்தம் ரூ.2,010) இந்த சலுகையைப் பெறலாம். இந்த மாடல், ஓலாவின் சமூக ஊடகப் பதிவு மூலம் அறிவிக்கப்பட்டு, ஓட்டுநர்களுக்கு நிதி சுதந்திரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஓலா பாஸ் எப்படி இயங்குகிறது?:
ஓலாவின் 30 நாள் பாஸ், ஒரு சந்தா அடிப்படையிலான (Subscription-Based) மாடல்யை அறிமுகப்படுத்துகிறது. ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு ரூ.67 செலுத்த வேண்டும், இது 30 நாட்களுக்கு மொத்தம் ரூ.2,010 ஆகும். இந்த பாஸை வாங்கிய பிறகு, ஓட்டுநர்கள் எந்த பயணத்திற்கும் கமிஷன் செலுத்த வேண்டியதில்லை.
ஓட்டுநர்கள் இந்த பாஸை ஓலாவின் அதிகாரப்பூர்வ தளம் அல்லது செயலி மூலம் வாங்கலாம். இந்த மாடல், ஓட்டுநர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற தமிழ்நாட்டு நகரங்களில் உள்ள ஓட்டுநர்களுக்கு இது பெரிய அளவில் பலன் அளிக்கும்.
ரேபிடோ:
ஓலாவின் இந்த மாடலை, ரேபிடோ (Rapido) போன்ற போட்டியாளர்களால் ஏற்கனவே பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்-ஆஸ்-எ-சர்வீஸ் (Software-as-a-Service) மாடல்யைப் பாலோ செய்கிறது. ரேபிடோ ஆட்டோ ஓட்டுநர்கள் நகரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு ரூ.9 முதல் ரூ.29 வரை செலுத்துகின்றனர். ஆனால், மாத வருமானம் ரூ.10,000-ஐ தாண்டினால், கூடுதலாக ரூ.500 சந்தா கட்டணம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications