இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை வைத்திருக்கும் ஓலா நிறுவனம் எலான் மஸ்க்-கிற்குச் சவால் விடும் வகையில் மிகவும் மலிவு விலை வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஓலா நிறுவன ஊழியர்கள் ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான பாவிஷ் அகர்வால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
இதனால் ஓலா பாவிஷ் அகர்வால் மீதான மதிப்பு பெரிய அளவில் பாதித்துள்ளது.
ஓலா நிறுவனம்
ஓலா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனரான பாவிஷ் அகர்வால் பணியிடத்தில் இரக்கமற்ற மற்றும் மோசமான முறையில் ஊழியர்களை நடத்தியுள்ளார், இதனால் நிர்வாகக் குழுமம் வருத்தம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விரோதம்
கடந்த 2 வருடமாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் work Culture ஊழியர்களுக்கு விரோதமாக மாறிவிட்டது எனத் தற்போது பணியில் இருக்கும் மற்றும் பணியில் இருந்து வெளியேறிய 24க்கும் அதிகமான ஓலா ஊழியர்கள் ப்ளூம்பெர்க்-யிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஊழியர்கள் தங்களது பெயரை வெயிட விரும்பவில்லை என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அடைமொழி வைத்து திட்டினார்
ஓலா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனரான பாவிஷ் அகர்வால் presentation-ல் பேஜ் நம்பர் இல்லாத காரணத்திற்காகக் கிழித்துப்போட்டும், ஊழியர்களைப் பஞ்சாபி மொழியில் அடைமொழி வைத்து திட்டியும், பல அணிகளை useless எனத் திட்டியும் உள்ளார் என இந்த ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மீட்டிங்
ஒரு மணிநேரம் மீட்டிங் என அறிவிப்பு வரும், ஆனால் 10 நிமிடம் கூட நடக்காது. மெமோ-வில் ஒரு வாக்கியத்தை உருவாக்காமல் இருப்பது, வளைந்த காகித கிளிப் அல்லது அச்சிடும் காகிதத்தின் தரம் ஆகிய சின்னச் சின்னப் பிரச்சனையின் காரணமாகப் பொறுமை இழந்து 10 நிமிடத்தில் வெளியேறிவிடுவார்.
ப்ளூம்பெர்க்
ப்ளூம்பெர்க் நிறுவனம் பாவிஷ் அகர்வால் தனது நிர்வாக ஸ்டைல் குறித்துக் கேட்டபோது, எல்லோரும் எங்களுடைய வேலை கலாச்சாரத்திற்கு ஓத்துவரமாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
தண்டனை
பாவிஷ் அகர்வால் நிர்வாகம் எந்த அளவிற்கு மோசம் என்பதற்கு உதாரணம் ஒரு ஷட்டர் திறந்திருக்க வேண்டும், ஆனால் மூடப்பட்டு உள்ளது, இதற்குக் காரணமான நபரை அழைத்துத் தொழிற்சாலையைச் சுற்றி 3 முறை ஓட உத்தரவிட்டு உள்ளார். Ola Futurefactory பல ஏக்கரில் அமைந்துள்ளது.
ஓலா ஸ்கூட்டர் தீ விபத்து
கடந்த 6 மாதத்தில் ஓலா தொழிற்சாலையில் இருந்து பல நூறு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல், நிர்வாக அளவில் இருந்த பல உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். ஓலா ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எறிந்தது முதல் ஓலா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications