ஓலா உருவாக்கிய விலை போர்.. இனி மக்களுக்குக் கொண்டாட்டம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பிரிவில் ஏதர், ஓகினாவா, பியூர் ஈவி, சிம்பிள் எனர்ஜி, டிவிஎஸ், ஹீரோ எலக்ட்ரிர், பஜாஜ் எனப் பல நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களது வாகனங்களை 70,000 முதல் 1.13 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்து வருகிறது.

மீண்டும் புதிய உச்சம் தானோ.. சென்செக்ஸ் மீண்டும் 59,450-க்கு மேல் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்..!மீண்டும் புதிய உச்சம் தானோ.. சென்செக்ஸ் மீண்டும் 59,450-க்கு மேல் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்..!

தொழில்நுட்ப தரம்

தொழில்நுட்ப தரம்

இதில் பெரும்பாலான நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்களில் தொழில்நுட்ப தரம் மிகப்பெரிய அளவில் இல்லை, ஆனால் புதிதாகக் களத்தில் இறங்கியுள்ள ஓலா தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவது மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியில் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே அதிகளவிலான நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

ஓலா ஸ்கூட்டர் விலை

ஓலா ஸ்கூட்டர் விலை

ஓலா தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ வாகனங்களை 99,999 மற்றும் 1,29,999 ரூபாய் விலையில் விற்பனை செய்து வரும் நிலையில் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு FAME கொள்கையின் படி 15,000 ரூபாய் அளவிலான மானியத்தை அளிக்கிறது.

விலை போர்

விலை போர்

ஒரு பக்கம் தொழில்நுட்பம் சிறந்து விளங்குகிறது, மறுபுறம் வாகனங்களின் விலையும் கிட்டத்தட்ட சக போட்டி நிறுவனங்களுக்கு இணையாக அளித்து வரும் காரணத்தால் சந்தையில் விலை போர் உருவாகியுள்ளது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இப்போது வரையில் ஏதர், ஓகினாவா, பியூர் ஈவி, சிம்பிள் எனர்ஜி, டிவிஎஸ், ஹீரோ எலக்ட்ரிர், பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையைக் குறைக்கவில்லை, ஆனால் ஓலாவின் விற்பனை துவங்கிய பின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் மிகப்பெரிய விலை போர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் பிரச்சனை

இந்தியாவில் இருக்கும் பிரச்சனை

மேலும் இந்தியாவில் பேட்டரி மற்றும் ஆட்டோமொபைல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் மேம்படும் பட்சத்தில் விலை அதிகளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

ஹீரோ EV நவீன் முன்ஜால்

ஹீரோ EV நவீன் முன்ஜால்

இந்தச் சூழ்நிலையில் ஹீரோ எலக்ட்ரிக் வாகனங்கள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான நவீன் முன்ஜால் 2027க்குள் இந்தியா பெட்ரோல் இரு சக்கர வாகன விற்பனையை அரசு தடை செய்தால் விரைவில் 100 சதவீதம் எலக்ட்ரிக் இலக்கை விரைவாக அடைய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஓலாவின் வருகையும் அதன் அறிமுக வெற்றியும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.

1,100 கோடி ரூபாய் விற்பனை

1,100 கோடி ரூபாய் விற்பனை

இதற்கு ஏற்றார் போல் ஓலா நிறுவனம் தனது ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டகளின் விற்பனையை துவங்கிய 2 நாளில் மொத்தத்தையும் விற்பனை செய்து டெலிவரிக்கு தயாராகியுள்ளது. 2 நாளில் மட்டும் வெறும் ஆன்லைன் தளத்தின் வாயிலாகவே சுமார் 1,100 கோடி ரூபாய் அளவிலான மதிப்பிற்கு விற்பனையை பதிவு செய்துள்ளது.

ஓலா சாதனை

ஓலா சாதனை

இதுவரை எந்த ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகைக்கு 2 நாளில் வர்த்தகம் செய்தது இல்லை என்றால் மிகையில்லை. இதில் அனைவரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் ஓலா இன்னும் தனது விற்பனை ஷோரூம்-களை உருவாக்காத போதே இவ்வளவு பெரிய வர்த்தகத்தை பெற்றுள்ளது வியக்க வைக்கும் ஒன்றாக உள்ளது.

அக்டோபர் 2021 டெலிவரி

அக்டோபர் 2021 டெலிவரி

தற்போது ஆர்டர் செய்துள்ள அனைவருக்கும் வருகிற அக்டோபர் 2021 முதல் டெலிவரி துவங்கப்படும் எனஅறும, அடுத்த விற்பனை நவம்பர் 1ஆம் தேதி துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த விற்றபனை தீபாவளி பண்டிகை காலத்தில் துவங்கும் என்பதால் 1100 கோடி ரூபாய் உச்ச அளவீட்டை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி தொழிற்சாலை

கிருஷ்ணகிரி தொழிற்சாலை

மேலும் ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் கட்டமைத்து வரும் புதிய தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் இயங்கும் ஒரு தொழிற்சாலையாக இருக்கும் என ஓலா நிறுவனத்தின் தலைவரான பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ஓலா ola ev
English summary

Ola S1, S1 pro triggers price war in India's EV two-wheeler market

Ola S1, S1 pro triggers price war in India's EV two-wheeler market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X