தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் ஓலா.. ஒரு மாதத்தில் 4,000 ஸ்கூட்டர்களை டெலிவரி..!

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஓலாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலையானது, கிருஷ்ணகிரி ஆலையானது மிகப்பெரிய அளவில் உற்பத்தி ஆலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உற்பத்தியினை தொடங்கியுள்ள நிலையில் ஓலாவின் எஸ் 1 ரக வாகனம் மற்றும் எஸ் புரோ வாகனமானது கடந்த சுதந்திர தின விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், டெலிவரி என்பது தொடர்ந்து கால தாமதமாகிக் கொண்டே வந்தது.

டெலிவரி

டெலிவரி

இதற்கிடையில் தான் ஓலா நிறுவனம் கிட்டதட்ட 4,000 ஸ்கூட்டர்களை நடப்பு மாதத்தில் டெலிவரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் பல நகரங்களுக்கும் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவிட்டாலும். ஓலாவின் உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் இது குறித்து கூறப்பட்டுள்ளது.

ஓலாவின் திட்டம்

ஓலாவின் திட்டம்

மேலும் வரவிருக்கும் மாதங்களில் ஓலா நாடு முழுவதும் வாகனங்களை டெலிவரி செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனங்கள் டெலிவரி செய்யப்பட்டு வந்தாலும், ஓலாவுக்கு இதுவரையில் ஷோரூம் என தனியாக இல்லாவிட்டாலும், ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்.

ஹைப்பர் சார்ஜர்

ஹைப்பர் சார்ஜர்

ஓலா மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக பிரத்யேகமாக இந்தியா முழுவதும், 4,000 ஹைப்பர் சார்ஜ் ஏற்றும் இடங்கள் அமைக்கபப்டவுள்ளது. இங்கு அடுத்த ஆண்டு ஜூலை வரையில் கட்டணமில்லாமல் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. ஓலா வாகன விற்பனையை அதிகரிக்கும் வேகத்தோடு, வாகனங்களை சார்ஜ் ஏற்றும் மையங்களையும் அமைப்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றது.

தடைகள்

தடைகள்

எனினும் சில தினங்களுக்கு முன்பு வெளியான செய்தியொன்றில் ஓலா மூலதன பற்றாக்குறைக்கு மத்தியில், உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு வெறும் 150 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிவதாகவும் தெரிவித்துள்ளது. இது உற்பத்திக்கு பெரும் தடையாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விலை அதிகரிக்க காரணம்

விலை அதிகரிக்க காரணம்

இது ஓலா மட்டும் அல்ல, பல்வேறு வாகன நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது வாகனங்களின் விலையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. ஏற்கனவே இந்த காரணத்தின் மத்தியில் பல வாகன நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. இதற்கிடையில் சந்தைக்கு பெரியளவில் வரும் முன்பே இந்த அளவுக்கு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+